Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகளை தடுக்க புதிய ஏற்பாடு..!

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த பொதுக்குழுவில், சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சிலிங் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கட்டடம் கட்ட உடனடி ஆவணமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும் மற்றும் டப்பிங் சீரியல் தடுப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும் என மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ