Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மொட்டை கூட அடிப்பேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!’ - 'யாரடி நீ மோகினி' சீரியல் நட்சத்திரா 

நட்சத்திரா


ஜீ தமிழ் சேனலில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகிவரும் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து வருபவர் நட்சத்திரா குட்டிசேரி. வெள்ளித்திரையில் கால் பதித்த கையோடு சின்னத்திரையிலும் நுழைந்திருக்கிறார் நட்சத்திரா. அவரிடம் பேசினோம்.

''உங்களுக்கு எப்படி சீரியலில் நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது?'' 

'கிடா பூசாரி மகுடி' என்கிற படத்தில் ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தேன். அந்தப் படத்தில் நடிச்ச சிவக்குமார் சார்தான் எனக்கான சீரியல் வாய்ப்புக் கதவை திறந்துவிட்டார். சீரியல்ல நடிக்கிறது வித்தியாசமான அனுபவமா இருக்குது. நடிப்புத் தொடர்பா பல விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன்'' 

''கிடாபூசாரி மகுடி' படத்தில் என்ன வித்தியாசம் காட்டியிருந்தீங்க?'' 

''அந்தப் படம் வெளியாகி ஒரு வருஷம் ஆகுது. படத்தோட கிளைமேக்ஸ்காக மொட்டை அடிச்சேன். என்னோட டெடிகேஷனைப் பார்த்த டைரக்டரும், யூனிட்ல இருக்கிறவங்களும் கைத்தட்டி கொண்டாடின நாளை மறக்க முடியாது. இந்தப் படம் பண்றப்ப பி.காம் முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தேன். மொட்டைப் போட்டுட்டு காலேஜுக்குப் போறதுக்கு ஒரு மாதிரி இருந்தது. யாராவது எதாவது சொல்லிடுவாங்களோனு பயந்தேன். அதுக்கப்புறம் பழகிடுச்சு. இனியும் நடிப்புக்காக மொட்டை அடிப்பேன். ஆனா ஒரு கண்டிஷன்.. எனக்கு கொடுக்கப்படுற கேரக்டர் வெயிட்டா இருக்கணும். சீக்கிரம் முடி வளர்ற மாதிரி தைலம் வாங்கி கொடுத்திரணும். என்ன டீல் ஓகேயா ''. 

''படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வருதா?'' 

''தமிழ் மற்றும் மலையாளத்துல வாய்ப்பு வந்துட்டுத்தான் இருக்கு. தமிழ்ப் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஹீரோயினாப் பண்றேன்''. 

''சீரியலுக்கான செலக்‌ஷன் எப்படி இருந்தது?'' 

''இந்த சீரியலுக்கான செலக்‌ஷன் போயிட்டு வந்தப் பிறகு மூன்று நாட்களா எந்தப் போனும் வரல. மனசு கஷ்டமா இருந்தது. மூன்றாவது நாள் எனக்கு போன் பண்ணி செலக்ட் ஆகியிருக்கிறதா சொன்னாங்க''. 

நட்சத்திரா

''யாரடி நீ மோகினி' சீரியல்ல உங்க கதாபாத்திரம் என்ன?'' 

''என்னோட கதாபாத்திரம் பெயர் வெண்ணிலா. நீங்க இந்த சீரியல் புரமோஷன்ல பார்த்திருப்பீங்க.. 'ஐயா' படத்துல வர்ற நயன்தாரா மாதிரி ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' பாட்டுக்கு பீல் பண்ணி நடிச்சிருப்பேன். எனக்கு மாமாவா வர்றவர் மேல அந்தளவுக்கு உயிரையே வச்சிருக்கிற கேரக்டர் என்னோடது. எனக்குப் பிடிச்ச மாதிரி என் முன்னாடி அவர் நடந்துப்பார். ஆனா உண்மையா என்னை விரும்ப மாட்டார். அவரோட குடும்பத்துக்கும் என்னைச் சுத்தமா பிடிக்காது. அவருக்கு வேற பொண்ண பார்க்க ஆரம்பிச்சிருப்பாங்க. இப்படித்தான் கதை நகரும். அச்சச்சோ மொத்த கதையும் சொல்லி சீரியல் பார்க்கிற சுவாரஸ்யத்தை கெடுத்துட்டேன்னா...''. 

''நடிப்புத் தவிர்த்து உங்களுக்குப் பிடிச்ச விஷயம்?'' 

''எனக்கு நிறைய ஊர் சுத்தப் பிடிக்கும். அதாவது, டிராவல் பண்ணப் பிடிக்கும். மத்தபடி படிப்புல நான் கில்லி. அதனால படிச்சுகிட்டே இருப்பேன்''. 

''உங்க குடும்பத்தை பற்றி?'' 

''அப்பா, அம்மா, உறவினர்கள்னு எல்லாருமே கேரளாவுல இருக்காங்க. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா.. அவ பேரு நிலா. அவளும் ஒரு மலையாளப் படத்துல நடிச்சிருக்கா. படிப்பு ரொம்ப முக்கியம்னு அப்பா அம்மா சொன்னதால இப்ப அதுல கவனம் செலுத்திட்டு இருக்கா. சீக்கிரமே சினிமாவுக்கு வரப்போறா. எங்க ரெண்டு பேருக்கும் அழகான பெயர் வைக்கணும்னு தேடித்தேடி, 'நட்சத்திரா, நிலா'னு அம்மா அப்பா பேர் வச்சாங்களாம். அப்படித்தான் நாங்க இருக்கோம்ல''.. வாய்விட்டு சிரிக்கிறார் நட்சத்திரா குட்டிசேரி. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close