Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''என்னை கிஃப்ட் மாமினு கூப்பிட்டா அவ்ளோ பிடிக்கும்!'' - விஜய் டி.வி சிந்து

சிந்து

விஜய் டி.வியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் 'கிங்க்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியில் நடுவராகக் கலக்கி வருகிறார் ஆர்.ஜே சிந்து. நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு கிஃப்ட் கொடுப்பது நடுவரான சிந்துவின் வழக்கம். அதனால் குழந்தைகள் அவருக்கு கிஃப்ட் மாமி என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி கேட்டாலே எமோஷனலாகிறார் சிந்து. 

''கிஃப்ட்ங்கிறது எல்லோருக்குமே பிடிச்ச விஷயம். என்னோட வாழ்க்கையிலயும், காலேஜ் படிச்சப்ப என் அம்மா வாங்கித் தந்த நோக்கியா ஃபோன் கிஃப்ட் மறக்க முடியாத ஒண்ணு. பொண்ணு தனியா இருப்பா, அவகூட பேசணும்னு அம்மா வாங்கிக் கொடுத்ததா சொல்வாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு கிஃப்டோட அருமை புரிய ஆரம்பிச்சது. அதன் தாக்கம்தான் கிங்க்ஸ் ஆஃப் காமெடி ஜுனியர் நிகழ்ச்சிக்கு வர்ற குழந்தைங்களுக்கு நான் கிஃப்ட் பிரசன்ட் பண்ணிட்டு வர்றேன். ஒருவகையில நானும் ஒரு சான்டா கிளாஸ்தான். ஆனா பசங்க என்ன கிஃப்ட் மாமினு செல்லமா கூப்பிடுவாங்க. அப்படி கூப்பிட்டா ரொம்பப் பிடிக்கும். 'ஐ லவ் தட் நிக் நேம்''. 

''நீங்களே சொந்த செலவில் வாங்குவீங்களா அல்லது ஸ்பான்சரா?'' 

'இல்லை..என் செலவில்தான் குழந்தைகளுக்கு கிஃப்ட் கொடுத்துட்டு இருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே நிறையப் பொருட்களை வாங்கி என் பேக் கவரில் போட்டு வச்சிருப்பேன். கிஃப்ட் இல்லாம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போனதே இல்ல. டெடிபியர், ஸ்போர்ட்ஸ் ஐட்டம்ஸ்னு குழந்தைகளுக்கு என்னென்ன ஐட்டம் பிடிக்குமோ, அதையெல்லாம் வாங்குவேன். அன்னைய நிகழ்ச்சியில் யார் சிறப்பாக நடிக்கிறாங்களோ, அவங்களுக்குக் கட்டாயம் பரிசு கொடுப்பேன். ஒருத்தர் முகத்துல மகிழ்ச்சியை வரவழைக்கிறோம்னா அதைவிட வேற சந்தோஷம் இருக்குமா என்ன...'' 

சிந்து

''இதுதான் உங்களுடைய முதல் தொலைக்காட்சி அனுபவமா?'' 

''ஆமாம். FEVER FM-ல ஆர்.ஜேவாக வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கூடவே, விஜய் டி.வியில் நடுவராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எப்பவும் கலகலனு பேசிட்டு, ஃப்ரெண்ட்ஸை வம்பிழுத்துட்டு இருப்பேன். விஜய் டி.வியில் நடுவராகும் வாய்ப்பு வந்ததும் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டேன். எஃப்.எம் புரோகிராம்ங்கிறது நம்ம பக்கத்துல யாரும் இருக்க மாட்டாங்க. தனி ரூம்ல ஹாயா ஃபெர்பார்ம் பண்ணலாம். வேலை பார்க்கிறது ஈஸியும் கூட. ஆனா சேனல் நிகழ்ச்சிங்கிறது நம்ம முன்னாடி பலபேர் கூட நிப்பாங்க. நம்மையே பார்த்துட்டு இருப்பாங்க. குழந்தைங்க மட்டும் 30 பேர் இருக்காங்க. இதுபோக டெக்னீஷியன்கள், ஜட்ஜ் ரம்பா, ரோபோ சங்கர், பிரியங்கானு ஒரு பட்டாளத்துக்குட சேர்ந்து வேலை பார்க்கணும். 


ஆரம்பத்துல டேக் சொன்னதும் பேந்தபேந்த முழிச்சேன். அதுக்கப்புறம் கொஞ்சம்கொஞ்சமா பழக ஆரம்பிச்சுட்டேனு நினைக்கிறேன். ரம்பா மேடம், ரோபோ சங்கர், பிரியங்கா இவங்களாம் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. எப்படி பேசணும், எப்படி ரியாக்‌ஷன் கொடுக்கணும்னு அவங்க கொடுக்கிறதை பச்சக்னு ஃபாலோ பண்ணிப்பேன்''. 

''ஆர்.ஜேவாக வேலைப் பார்க்கணும் என்பதுதான் உங்க கனவா?'' 

''அப்படியெல்லாம் இல்ல. நான் ஒரு டென்டிஸ்ட். படிப்பு முடிச்சுட்டு தனியாப் பிராக்டிஸ் பண்ணத் தோணல. என்னைப் பொருத்தவரை எப்பவும் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருக்கணும். அதாவது ஆபீஸ் வேலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா உட்கார்ந்திருக்கப் பிடிக்காது. டாக்டராகி தனியாக பிராக்டிஸ் பண்றதைவிட ஆர்.ஜேவாக இருக்கிறது பிடிச்சிருந்தது. அதனால் தான் தொடர்ந்து இந்த துறையில கவனம் செலுத்திட்டு இருக்கேன்''. 

''பல் மருத்துவரான நீங்க ஃபாலோ பண்ற விஷயம்?'' 

''என்னுடன் பல் மருத்துவம் படிச்ச ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் பெங்களூரில் மருத்துவமனை வச்சிருக்காங்க. ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது அங்கு போய் செக் பண்ணிப்பேன். அதேபோல ஒரு நாளைக்குக் காலை, மாலை என கட்டாயம் இரண்டு முறை பல் விளக்கிடுவேன். இதுதான் ஒரு பல் மருத்துவராக நான் ஃபாலோ பண்ற விஷயமும், மத்தவங்களுக்கு பரிந்துரைக்கிற விஷயமும்''. 

''ரம்பா எப்படி உங்கக்கிட்டப் பழகுவாங்க?'' 

''ரம்பா ரொம்ப ஸ்வீட். அவ்வளவு அழகாப் பேசுவாங்க. என்னை ஒரு நாள் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வரச்சொல்லியிருக்காங்க. 'நான் வெஜிடேரியன் மேடம்'னு சொன்னேன். 'அப்போ, வெஜிடேரியன் டிஷ் ரெடி பண்ணிடுறேன்'னு சொல்லியிருக்காங்க. என்னை எப்பவும் 'சிந்து மேடம்'னுதான் கூப்பிடுவாங்க. என்னை மேடம்னு கூப்பிட வேண்டாம் எனப் பல தடவை சொல்லிட்டேன். ஆனாலும், இன்னும் மாத்திக்காம இருக்காங்க''. 

கணவருடன் சிந்து

''உங்களுக்குத் திருமணம்....?'' 

''ஆகிடுச்சு. காதல் கல்யாணம். பல வருஷ லவ்... பெத்தவங்க சம்மதத்தோட அரேஞ்டு ஆச்சு. அவர் பெயர் சந்தோஷ். படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்''. 

''உங்களுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கா?'' 

''நல்ல கதை மற்றும் வாய்ப்பு வந்தா நடிக்கலாம். பார்ப்போம்''. என்கிறார் பற்கள் தெரிய சிரித்தபடி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close