Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவங்க ரேஷன் கார்டுல 40 பேர்... ஆச்சர்ய கூட்டுக்குடும்பம்! #வீடியோ

கூட்டுக்குடும்பம்

கூட்டுக்குடும்பம் வழக்கொழிந்து போய்விட்டது என்பதை விடுங்கள்.. நீங்க கூட்டுக்குடும்பமா என்ற கேள்வியே வழக்கொழிந்துவிட்டது. சரிதானே? யாரையாவது பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்கிறோமா நாம்? திருமணமாகி கணவனும், மனைவியும் ஒருவீட்டில் இருப்பதே கூட்டுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு குடும்பம் எப்படி இருக்கிறது என்பதைக் காண ஆசையா?

சமைப்பது யார் வேலை என்றால் பொதுப்புத்தி, ‘அடுப்படி பெண்களுக்கே ஆனது’ என்று சொல்ல.. இங்கே ஒருவர் குடும்பத்தில் அனைவருக்கும் சமைத்துப் போடுகிறார். அதிலும் ஒரு மிலிட்டரி ஒழுங்கு. இரண்டு பேர் இருக்கிற வீட்டிலேயே ஒரு ரிமோட்டுக்கு அடிதடியாய் இருக்க, இத்தனை பேர் இருக்கிற குடும்பத்தில் எத்தனையெத்தனை விஷயங்கள் நடக்கும்.. சுவையாய்.. சுவாரஸ்யமாய்..!

சரி.. ஒரு பத்தடிக்கு பத்தடி இடத்தையே நாலு பேருக்கு பங்கு போட்டு பத்திரம் எழுதிக் கொடுக்கும் இந்தக் காலத்தில், இவர்கள் செய்த ஒரு விஷயத்தை வேலையை இந்த வீடியோவின் 5-வது நிமிடத்தில் பாருங்கள். பிரமித்துப் போவீர்கள். அதற்கு மகன் முத்தையா சொல்லும் பதிலில் நெகிழ்ந்து போவீர்கள்! 

ஒரு பேத்தி தனது அப்பத்தாவின் ரொமான்ஸ் கதையை சொல்லும் 6.01வது நிமிடம்... ஒரு நல்ல சினிமாவுக்கான கைதட்டல் பெறுகிற காட்சி! சும்மாவா... அந்தக் காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணின ஜோடியாச்சே!

அன்பு ஒன்றே பிரதானமாய் இருக்கும் இந்தக் குடும்பத்தின் அழகை கீழுள்ள வீடியோவில் கண்டு ரசியுங்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் உங்களையும் தொற்றிக்கொள்ளும்!

 

 

இத்தனை பேர் கூட்டுக்குடும்பமாக இருக்க செட்டிநாடு அரண்மனை வீடுகள் தேவையில்லை. அன்பான மனங்கள் இருந்தால் போதும்!

 

.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ