Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? #VikatanSurveyResult

பாலியல் கல்வி

ந்தியாவின் பல்வேறு இடங்களிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் செக்ஸ் கல்வி அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விகடன் இணையதளத்தில் "இந்தியாவில் பாலியல் கல்வி அவசியம் வேண்டுமா?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதில், 80 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பாலியல் கல்வி குறித்த தெளிவு நம் சமூகத்தில் இல்லை. இந்த குறையை நீக்கி பாலியல் கல்வியை தெளிவுடன் செயல்படுத்தினால் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்துள்ள பதில்கள் மற்றும் அதன் முடிவுகள் என்னவென்பதைப் பார்ப்போம்...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

பெண்கள் உடல்அளவு பற்றி சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது பற்றிய உங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும்...

*Sex education is dangerous to our future girls so please stop this eduation

*சீக்கிரம் பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகபடுத்துங்க. உலகம் உள்ளங்கைக்கு வந்த பிறகும் ஏன் தாமதம் ????

*உடலுறவு கொள்வது எப்படி என்பதைக் கற்று தருவதைத் தான் பாலியல் கல்வி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது மட்டும் அல்லாமல் ஆண் பெண் உறவு இச் சமூகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உணர்த்துவதுவே பாலியல் கல்வி. அதை பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். 

*பாலியல் கல்வி இத்தகு காலகட்டத்தில் மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு உடல் உறுப்புகள் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். பின் அவை செயல்படும் விதம், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஒவ்வொரு வகுப்பிலும், அவர்களுக்குப் புரியுதோ இல்லையோ பட்டியலிடுகிறோம். அதைப் போலவே ஆணுறுப்பு, பெண்ணுறுப்புப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளையும் மற்ற உறுப்புகளைப் போலவே சொல்லிக் கொடுக்கும் போது, எவ்வித வித்தியாசமும் விகல்பமும் அவர்களுக்கு தெரிவதில்லை. மிக முக்கியமான ஒன்று, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் கட்டாயமாக அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அதே வகை கல்வியைப் பற்றிய தெளிவும், தேவைப்பட்டால் வகுப்புகளும் எடுக்கப்பட வேண்டும். வீடு மாறினால் தவிர, பள்ளியால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த இயலாது.

*Proper sex education will make younger generations to treat opposite gender with mutual respect.

*இன்று... காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை தொலைகின்ற பல மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கண்டிப்பாக தேவை... செக்ஸ் கல்வி இல்லாததால் தான் செக்ஸ் என்ற வார்த்தை கூட இன்று கேட்ட வார்த்தை ஆகி விட்டது

*பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாது, பெண்கள் மீது ஏவப்படும் வன்மம், மறுக்கப்படும் சமத்துவம் என அனைத்துமே சாத்தியமகும்

*இந்த தலைப்பு தெரிவதால் குழந்தைகளுக்கு தெளிவு ஏற்படும்

*மக்களுக்கு பகுத்தறிவு இன்னும் வளர வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

 - நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close