Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரணக் கிணற்றில் த்ரில்... திகில்... சாகசம் செய்யும் மனித உயிர்கள் - #VikatanPhotoStory

இவ்வுலகில் சாகசங்களுக்கு ஆட்படாத மனித மனம் கிடையவே கிடையாது! இன்றைக்கு எல்லோர் கைகளையும் ஆக்கிரமித்திருக்கும் செல்ஃபோன் 'ஆப்'களில் பெரும்பாலானவை அந்த சாகசங்களை மூலதனமாகக் கொண்டவைதான். சப்வே சஃபர்ஸில் நாணயத்தைச் சேகரிக்கும் முனைப்பில் அனைத்தையும் மறந்து கிடப்பவர்கள் இப்போது பெருகிவிட்டார்கள். இந்த விரல் நுனி தொழில்நுட்பமும், புரோகிராமிங் செய்யப்பட்ட பொம்மை விளையாட்டுகளும் வராத காலத்தில் மனிதர்களுக்கு அந்த சாகச பரவசத்தைக் கொடுத்தவைகளுள் மிக முக்கியமானது மரணக் கிணறு.

மரணக்கிணறைச் சுற்றி கிட்டத்தட்ட அறுபது எழுபது டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான இரும்புக் கம்பிகள் உதவியோடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் மரணக்கிணறு அந்த டியூப் லைட்டுகளின் ஒளியில் மின்னும்.  நுழைவாயிலில் இரண்டு பெரிய ஸ்பீக்கர்கள்  வைத்திருப்பார்கள். ஒருவர்  மைக் பிடித்தபடி தனக்கே உரிய இழுவையான குரலில் பார்வையாளர்களை இழுத்துக்கொண்டிருப்பார். அவர் அருகில் அமர்ந்திருக்கும் பெண்கள் உள்ளே வரும் பார்வையாளர்களை வரவேற்று இருக்கைக்கு அனுப்புவார்கள்.  உள்ளே இரண்டு ஆண்கள் பைக்கோடு தயாராய் அமர்ந்திருப்பார்கள். பார்வையாளர்கள் கூடியதும், கிணற்றின் மத்தியில் இருக்கும் கம்பியில்  வைக்கப்பட்டிருக்கும் கடவுளின் படத்தை வணங்கிவிட்டு சாகசத்தை ஆரம்பிப்பார்கள். முதலில் ஒருவர் ஆக்ஸிலேட்டரைத் திருகி உர்ர்ர்.. உர்ர்றென உறுமியபடி பைக்கை மேலே ஏற்றுவார்.

அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் பைக்கை மேலே ஏற்றி சுற்ற ஆரம்பிப்பார்கள். உர்ர்ர்ர்.. உர்ர்ர்... சத்தம் பெருகும். பார்வையாளர்கள் நிற்கும் இடங்கள் தட தடவென அதிர பைக்குகள் மரணக்கிணற்றைச் சுற்றி பறக்க ஆரம்பிக்கும். அந்த நொடி முதல் பயமும் பதற்றும் தொற்றிக்கொள்ளும். பார்வையாளர்கள் மெய்மறந்து கைத்தட்டுவார்கள். கைத்தட்டல் அதிகரிக்க அதிகரிக்க. வித்தைகள் மாறிக்கொண்டே இருக்கும். சம்மணம் போட்டபடி,  இரண்டு கைகளையும்விட்ட படி, மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று வண்டியைச் செலுத்துவார்கள் வீரர்கள். முடிக்கும் தருணத்தில்தான் உட்சபட்ச த்ரில்லே! இரண்டு மாருதி 800 கார்களைக் கிணற்றின் மேல் ஏற்றுவார்கள், அதில் வெளியே தொங்கியபடி ஆண் , பெண் சாகசம் செய்வார்கள். இரண்டு கார்கள், மூன்று பைக்குகள்,  உரசிக்கொள்ளாமல் சீற ஆரம்பிக்கும்... பார்க்கவே கண்கொள்ளா காட்சி அது. இந்த சாகசத்தில் "கரணம் தப்பினால் மரணம்தான்"  அதனால்தான் இதன் பேரே ‘மரணக் கிணறு’.   இதில் தவறினால் சப்வே சஃபர்ஸ் போன்று எந்தப் பவராலும் உயிர் கொடுக்க முடியாது.! 
     

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

மரணக் கிணற்றின் வெளிப்புறத் தோற்றம் 

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 பார்வையாளர்களை ஒலிபெருக்கி மூலம் அழைக்கிறார் 

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

பார்வையாளர்கள் வருகைக்காகக் காத்திருக்கும் சாகச வீரர்கள்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 பார்வையாளர்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

மரணக் கிணற்றின் நுழைவு வாயிலில் சாகசம் முடித்து நிற்கும் இரு சக்கர வாகனம்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 கடவுளைச் சாட்சியாக வைத்துக்கொண்டே ஒவ்வொரு சாகசங்களையும் தொடங்குகின்றனர்.

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 மரணக் கிணற்றில் சாகசம் செய்யத் தயாராக நிற்கும் வாகனங்கள் 

 

 மரணக் கிணறு

 பார்வையாளர்களின் பார்வையில் இருந்து மரணக் கிணற்றின் முழுத் தோற்றம்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 சாகசத்திற்கு முன்னர், இருசக்கர வாகனத்தை சோதனை செய்யும் சாகசக்காரர்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 மரணக் கிணற்றில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வரும் சாகசக்காரர்கள்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

மரணக் கிணற்றில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வரும் சாகசக்காரர்கள்

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

ஒரே நேரத்தில் மரணக்கிணற்றை வளம் வரும் மூன்று இரு சக்கர வாகனங்கள்   

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 மரணக் கிணற்றில் காரில் சாகசம் செய்யும் ஆண் மற்றும் பெண் சாகசக்காரர்கள் 

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

   ஒரே நேரத்தில் இரண்டு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனம் மரணக்கிணற்றில் சாகசம் செய்யும் காட்சி

 

உயிர்கள் வலம் வரும் மரணக் கிணறு

 நிகழ்ச்சிக்குப் பின் சாகசக் காரர்களை வாழ்த்தும் பொதுமக்கள்

இப்போதைய தொழில் நுட்பம் தரும் பொம்பை விளையாட்டுகளின் வர்த்தகத்தில் ஒரு சிறு துளி கூட இவர்களுக்குக் கிடையாது. வருமானம் வயிற்று சாப்பாடுக்கே பத்தாது. இவர்களுக்கான சந்தோஷம். இவர்களுக்கான மகுடம் எல்லாமே பார்க்க வந்தவர்களின் கைத்தட்டல்களே. ஒவ்வொரு கைத்தட்டல்களுக்கும் இவர்களுடைய உயிர் அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும்! இன்னமும் சுழன்று கொண்டிருக்கின்றன.

Advertisement