Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

WIFI பயன்படுத்தினால் வரும் 25 வருடத்திற்குள் மரணம்-பரபரப்புக் கிளப்பிய பாடகி!

 

 லண்டனைச் சேர்ந்த ஆஸ்கார் வென்ற பிரபல பாடகி அடெல் சமீபத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. WIFI பயன்படுத்தி வருவதால் அடுத்து வரும் 25 வருடத்துக்குள் பலரும் மரணத்தை தழுவ வாய்ப்பிருப்பதாக அதிரடியாக கூறி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். இன்று வளர்ந்து வளரும் டெக்னாலஜி ஒரு விதத்தில் உதவியாக இருந்தாலும், பல விதத்தில் ஆபத்தையே விளைவிக்கிறது. அதனால் எனக்கு டெக்னாலஜி பிடிப்பதே இல்லை. அதுவும் வயர்லஸ் INTERNET பூதாகரமாகி பிரச்னையாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

நான் மேடையில் பாடும்பொழுது ஒரே நேரத்தில் 18,000 க்கும் மேற்ப்பட்ட போன் கேமராக்கள் என்னை படம் எடுக்கின்றன. இது நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அதே சமயம் எப்பொழுதும் போனும் கையுமாக இருப்பது ஆபத்துதான். நீங்கள் வேண்டுமானால் காத்திருந்து பாருங்கள் ஒரு நாள் WIFI போன்ற வயர்லெஸ் விஷயங்கள் 25 வருடத்துக்குள் பலரையும் மரணத்துக்கு உள்ளாக்கும் என அடெல் பேசியுள்ளது பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ