Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ன பேசுகிறார்கள் நெட்டிசன்ஸ்?

சும்மாவே ஹேஷ்டேக் போட்டு விளையாடுவார்கள் ட்விட்டர்கள். இன்று வந்த அறிவிப்புக்கு சும்மா இருப்பார்களா? நெட்டிசன்ஸ் கண் விழித்து கலக்கிய ட்வீட்களின் தொகுப்பு இதோ.

@Baashhu

23 நோட்டு 500 ல இருக்கு, காலைல ஹவுஸ் ஓனர் கிட்ட வாடகை கொடுத்துடலாம்.அந்தாள் நியூஸ் பாத்திருக்க மாட்டான்

@meenammakayal

மக்கள் எல்லாம் ஒற்றுமையா இருந்து.. 500 , 1000 ரூபாய்க்கு பழைய மதிப்பையே அடுத்த இரண்டு நாட்களுக்கு கொடுப்போம் என உறுதி எடுத்தால் prblm solved

@Chaintweter

நல்லவேளை 7:30மணிக்கு 500ரூபாய் நோட்ட ஒரு பாவ் பாஜி கடையில மத்திட்டேன்னு நினைக்கும்போது... கடவுள் இருக்கான் குமாருனு தோனும்.

@withkaran

லோக்கல் சைனீஸ்காரன்லாம் வந்து விசாரிக்குறான்..செம ரீச் போல..நல்ல முடிவுன்னு பாராட்டிட்டு போறான்

@RazKoLu

அப்டின்னா நாளைக்கு 1000ரூ கட்டு ரோட்ல கெடந்தா கூட யாரும் சீண்ட மாட்டாங்களா?

@thoatta

எல்லோரும் பணத்தை போட்டுட்டீங்களா? இப்ப 'மலைய தூக்கி தோள்ல வைங்க'ன்ற ரேஞ்சுல பழைய 500 & 1000 நோட்டே செல்லும்னு சொல்லப்போறானுங்க

@teakkadai:

அப்படியே இந்திய பி.ஈ யும் செல்லாதுன்னு அறிவிச்சுட்டா நல்லா இருக்கும்.

 ‏@David_EXIM  
கடன் வச்சிருக்கவன்லாம் சந்தோசமாவும், கைல காசு வச்சிருக்கவன்லாம் கதறிட்டு இருக்கதையும் இன்னிக்கு தான் பாக்கிறேன் :)))))))

‏@thirumarant  
நம்மூர்ல பெட்ரோல் 10 பைசா ஏறுச்சுனாலே பங்க்ல லைன் கட்டி நிப்பாணுக... இவனுகள வச்சிக்கிட்டு இப்படி அதிரடியா அறிவிச்சா இதான் கதி...

@arattaigirl 
இரண்டோ மூணோ 500 ரூபாய் நோட்டு வச்சுருக்கற எனக்கே இப்படி பதறுதே நிஜமா கருப்பு பணம் வச்சுருக்கறவனெல்லாம் ஹார்ட் அட்டாக்ல போயே போயுடுவாங்க

@arasu1691

இனி பால்காரன் , பேப்பர்காரன்னு பூராப்பயலுகளுக்கும் செக்கா குடுக்கறோம் #சாவுங்கடா

@billumohan83

500 ரூபாய் செல்லாது மச்சினு போன் பண்ணி சொல்றான் நண்பன் பாரேன் இந்த பையனுக்கு நம்ம ஏதோ ஒரு ஏங்கல பணக்காரனா தெரிஞ்சி இருக்கோம்

@Agizo_Jay

Black money வெளியே வருதோ இல்லையோ ஆனா-கணவனுக்கு தெரியாம அரிசிடப்பா,லாக்கர்ல,பீரோல wife ஒளிச்சி வச்சிருக்கற black money confirm வெளியவரும் போல

வாட்ஸப் கலாட்டா:

விஷயத்த கேட்டு அம்மா முழிச்சிக்கிட்டாங்க. சசிகலா கோமாக்கு போயிட்டாங்களாம்.

அமெரிக்கா ஓட்ட எண்ணுது. இந்தியா நோட்ட எண்ணுது.

அதுக்குள்ள கருப்பு பணத்த வெள்ளையாக்க, டால்கம் பவுடரா வாங்கியிருக்காராம் ராகுல் காந்தி.

கிளண்டனுக்கும், றம்புக்கும் ரெடியாகி இருக்காங்க மீடியா.. அவுட் ஆஃப் சிலபஸா மோடி வந்துட்டாரு.

தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் எல்லோர் நினைவிலும் இனி இருக்கும் 8/11

பதினைந்து லட்சம் அக்கவுண்ட் போடுறேன் சொல்லி வந்து பாக்கெட்ல இருந்த ஐநூறுக்கும் ஆப்பு வைச்சுடாங்களே

உலகமே அமெரிக்க தேர்தலை பார்த்துட்டு இருக்கும் போது, ஒரே அறிவிப்புல ஒட்டு மொட்ட உலகத்தையும் இந்தியாவ பார்க்க வச்சார் பார், மோடிடா

பொது மக்கள் கவனத்திற்கு....திருடர்கள்  500/1000 ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பர்சிலுள்ள...10/20/50/100 ரூபாயை திருடுவதால், கவனமாக இருக்கவும்...

டிரயின்லே 5 கோடி திருடினானே அவன நினச்சா சிரிப்பு சிரிப்பா வருது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close