Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சை கருத்தால் சரிந்தது ஸ்னாப்சாட் ரேட்டிங்!

ஸ்னாப்சாட்டிற்கு 5 ஸ்டார்கள் ரெட்டிங் குறைந்து ஒரே ஒரு ஸ்டார் மட்டுமே அளிக்கபட்டுவருகிறது.அதன் சி.இ.ஓ இவான் ஸ்பீகல்லின் சர்ச்சைக்குரிய கருத்தால் இச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. இவான் ஸ்பீகல்,' ஸ்னாப்சாட் பணக்காரர்களுக்கான ஆப். அதை இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை' என கூறியுள்ளதாக தகவல் வெளியானது. ஸ்னாப்சாட் முன்னாள் ஊழியர் ஆண்டனி 2015-ம் ஆண்டு ஸ்னாப்சாட் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த கூட்டத்தில் தான் ஸ்பீகல் இக்கருத்தை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் ஸ்னாப்சாட்டை வறுத்தெடுக்க தொடங்கினர். இந்தியா ஏழை நாடு இல்லை, குட் பை ஸ்னாப்சாட் என விதவிதமான டேக்கில் ஸ்னாப்சாட்டை ட்ரெண்ட் செய்தனர். 

இந்நிலையில் ஸ்னாப்சாட்டின் மதிப்பீடுகள் வெகுவாக குறைந்துள்ளது. ஆப் ஸ்டோரில் ஒரே நாளில் பலர் ஐந்து  நட்சத்திரங்களை விட ஒரு நட்சத்திரம் மட்டுமே ரேட்டிங் தர தொடங்கியுள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரிலும் இதன் ரேட்டிங் சரிய தொடங்கியுள்ளது. மேலும், பலர் ஸ்னாப்சாட் கருத்து பெட்டியில் ஸ்பீகலின் கருத்துக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தரப்பில் 'இது ஒரு பொருத்தமற்ற குற்றசாட்டு, ஸ்னாப்சாட் உலகத்தில் இருக்கு எல்லோருக்குமானது' என கூறப்பட்டுள்ளது.   

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

வைரல் கார்னர் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close