Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியா சொல்வது ஆர்.ஜே.பாலாஜி - பொங்கும் நெட்டிசன்கள்!

ரேடியோ பிரபலமான ஆர்ஜே.பாலாஜி அடிக்கடி இணையத்தில் சமூகம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிப்பார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய்களைத் தடை செய்தார். அன்று இரவே 'புது இந்தியா பிறந்துள்ளது' என்று தன் முழுமையான ஆதரவை ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார். அதன் பின்னர் ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் அனுமதிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்த ஆர்ஜே.பாலாஜி பின்னர் போராட்டம் திசை திரும்புகிறது என்று வீடியோ வெளியிட்டு விலகினார். 

 

 

இவர் நேற்று தனது ட்விட்டரில் பதிந்த ஒரு ட்வீட் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. அந்த ட்விட்டில் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ ஆகிய பாடத்திட்டங்களில் படித்த இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதுபோலவும் அதைப்பார்க்கும் சமச்சீர் கல்வி மாணவர் " மச்சி, அங்க பாரேன் ரெண்டு பாரீன்காரங்க.." என்று சொல்வது போன்றும் ட்வீட் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் சமச்சீர் கல்வியில் படிக்கும் நிலையில் ஒட்டு மொத்த மாணவர்களும் ஆங்கிலம் அறியாதவர்கள் என்கிற தொனியில் இருக்கும் அந்த ட்வீட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் என்பது மற்றொரு மொழிதான் என்றும் இனி பாலாஜி ஆங்கில ரேடியோவில் போய் ப்ரோகிராம் பண்ணட்டும் என்றும் நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர். அவருக்கு வந்த நாகரிகமான ரிப்ளைகள் சில உங்கள் பார்வைக்கு

 

ஆர்.ஜே.பாலாஜி

 

 

 

பாலாஜி

 

balaji

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close