Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கான டாப் -7 ஸ்கூட்டர்கள்!

பொண்ணுங்க, மாப்பிள்ளையைக்கூட சீக்கிரம் செலக்ட் பண்ணிடுவாங்க; ஆனா, ஸ்கூட்டர் வாங்குற விஷயத்துல அவ்ளோ சீக்கிரம் திருப்திப்பட மாட்டாங்க. ‘அந்த ஸ்கூட்டர் வாங்கியிருக்கலாமோ’... ‘இதைவிட அதுல மைலேஜ் நல்லா வரும்போல இருக்கே?’னு கன்னாபின்னா டயலாமாவுல சிக்கித் தவிக்கிற பெண்களின் நலன் கருதி, மார்க்கெட்டில் டாப்பாக  இருக்கும் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்டும்... அதன் கெத்து, வெத்து விஷயங்களும் இதோ... (விலைகள் எல்லாமே சென்னை ஆன் ரோடு)

 

 

1. யமஹா ரே Z

விலை: ரூ. 60,071 

இன்ஜின்: 113 சிசி

எடை: 104 கிலோ

மைலேஜ்: 43.5 கி.மீ

 

கெத்து:

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், எடை குறைவு, ஷார்ப் டிஸைன்

 

வெத்து:

கிரவுண்ட் கிளியரன்ஸ்... அதாவது, தரைக்கும் ஸ்கூட்டரின் அடிப்பகுதிக்கும் உள்ள இடைவெளி... (128 மிமீ), பிரேக் லாக் கிளாம்ப் இல்லை. (இது மேடு-பள்ளங்களில் ஸ்கூட்டரை பார்க் பண்ண சிரமம்!)

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா...?

சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட, சாஃப்ட் சஸ்பென்ஸன் கொண்ட அருமையான ஸ்கூட்டர். ஒல்லியான பெண்கள் ஈஸியாக ஹேண்ட்லிங் செய்யலாம். இந்தியாவில் இருக்கும் ஸ்கூட்டர்களிலேயே கிரவுண்ட் கிளியரன்ஸ் கம்மியான ஸ்கூட்டர் ரே-தான். எனவே, ஸ்பீடு பிரேக்கர்களில்... பீ கேர்ஃபுல்.

 

2. ஆக்டிவா 110

விலை: ரூ. 60,433

இன்ஜின்: 109 சிசி

எடை: 111 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 155 மிமீ

மைலேஜ்: 44.4 கி.மீ

 

கெத்து:

உறுதியான கட்டுமானத் தரம், ஸ்பேர்ஸ் எளிதாகக் கிடைப்பது, பிரேக்ஸ்

 

வெத்து:

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இல்லை; ஓட்டுதல் தரம் நிறைவாக இல்லை.

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா....?

ஆக்டிவா 110 மெட்டல் பாடி என்பதால், ஃபைபர் மெட்டீரியல் கொண்ட ஆக்டிவா-i ஸ்கூட்டரைவிட எடை கொஞ்சம் அதிகம். ஸ்கூட்டர்கள் அனைத்தும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுக்கு மாறிக் கொண்டிருக்க, ஆக்டிவா 110-ல் மட்டும் பழைய ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் என்பது நெருடல். இதனால், ஓட்டுதல் தரத்தில் ஆக்டிவா  - ஆக்டிவ் ஆக இல்லை. ஆனால், ஹோண்டாவின் காம்பி பிரேக்ஸ், மிகப் பெரிய நம்பிக்கை தருகிறது. எப்பொழுதுமே விற்பனையில் நம்பர்-1 ஆக்டிவாதான். இதனால் ஸ்பேர்ஸ் பற்றிக்கவலைப்பட வேண்டியதில்லை. 

 

3. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

விலை: ரூ. 65,203

இன்ஜின்: 109 சிசி

எடை: 110 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 155 மிமீ

மைலேஜ்: 39.2 கி.மீ

 

கெத்து:

வசதிகள், மேட்ஃபினிஷிங் ஸ்டைல், கட்டுமானம், பெட்ரோல் டேங்க், மோனோஷாக் சஸ்பென்ஷன்

வெத்து:

டிஜிட்டல் மீட்டர் தெளிவாக இல்லை. முன் பக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸ், உயரமான பெண்களுக்கு, ஓட்டும்போது கால் இடிக்கலாம்.

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா...?

பாஸ் லைட், யுஎஸ்பி செல்போன் சார்ஜ் போர்ட், சீட்டுக்கு அடியில் அதிக இடவசதி என்று வசதிகள் அதிகம். மேட்ஃபினிஷிங் ஸ்டைலிங், நிறைய பெண்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், விலை அதிகம் என்பதோடு, கலர் ஆப்ஷனும் குறைவு.

 

4. டிவிஎஸ் ஜூபிட்டர்

விலை: ரூ. 60,922

இன்ஜின்: 109.7 சிசி

எடை: 108 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 150 மிமீ

மைலேஜ்: 44.4 கி.மீ

 

கெத்து:

 

வசதிகள், மோனோஷாக் மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், எக்கோ - பவர் மோடு, பெட்ரோல் டேங்க், பிரேக் லாக் கிளாம்ப்

வெத்து:

தரம், கலர் ஆப்ஷன், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் இல்லை.

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா...?

பெண்கள் ஈஸியாக பெட்ரோல் நிரப்புவதற்கு வழி செய்தது டிவிஎஸ்தான். வீகோவில் அந்த வசதி செம பிக்-அப் ஆனது. அந்த வகையில் பெண்கள் வயிற்றில் பால் வார்த்த பெருமை ஜூபிட்டருக்கும் உண்டு. மல்ட்டி ஃபோகஸ் ரெஃப்ளக்டருடன் கூடிய ஹாலோஜன் ஹெட்லைட், செம பவர்ஃபுல். பவர் மற்றும் எக்கோ மோடுகள் பயனுள்ளதாக இருக்கிறது. 110 விநாடிகள் ஐடிலிங்கில் இருந்தால், பெட்ரோல் வேஸ்ட் ஆகிறது என்று பவர் மோடு எரிந்து எச்சரிக்கும்.

 

5. சுஸூகி ஆக்ஸஸ் 125

விலை: ரூ. 65,575

இன்ஜின்: 125

எடை: 102 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 160 மிமீ

மைலேஜ்: 43.5

 

கெத்து:

இன்ஜின் பிக்-அப், ஸ்மூத்னெஸ், டிஸ்க் பிரேக், ட்ரிப் மீட்டர், அலாய் வீல்

வெத்து:

பெட்ரோல் டேங்க் சீட்டுக்கு அடியில் இருப்பது.

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா...?

ஸ்கூட்டரில் முதன் முதலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனைக் கொண்டு வந்த பெருமை ஆக்ஸஸுக்குத்தான் உண்டு. ஸ்கூட்டர்களிலேயே அகலமான சீட் என்பதால், (30 இன்ச்) கணவன்-மனைவி-குழந்தை கொண்ட ஒரு குடும்பத்துக்கு பெஸ்ட் சாய்ஸ். டிஸ்க் பிரேக் இருப்பதால், கல்லூரிப் பெண்களும் கெத்து காட்டலாம். பெட்ரோல் நிரப்ப பழைய ஸ்டைலில் ஸ்கூட்டரை விட்டுக் கீழே இறங்க வேண்டியிருப்பது, டார்ச்சர்.

 

6. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்

விலை: ரூ. 56,317

இன்ஜின்: 109 சிசி

எடை: 98 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 150 மிமீ

மைலேஜ்: 45.4 கி.மீ

 

கெத்து:

குறைவான எடை, டிஸைன், ஆட்டோ சோக் சிஸ்டம்

 

வெத்து:

சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர் இல்லை. (அலாரம் மட்டுமே)... பெட்ரோல் டேங்க் சீட்டுக்கு அடியில் இருப்பது.

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா...?

வீகோ மற்றும் ஜூபிட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பதால், பவர் ஓகே! ஆட்டோ சோக் சிஸ்டம் இருப்பதால் - ஸ்ட்ரீக், டீன்ஸ் போன்றவற்றில் இருப்பதுபோன்ற ஸ்டார்ட்டிங் டிரபுள் நிச்சயமாக ஜெஸ்ட்டில் கிடையாது. ஸ்கூட்டர்களிலேயே குறைவான எடை ஜெஸ்ட்தான். ஒல்லி பெல்லி பொண்ணுங்களுக்கு ஜெஸ்ட் பெஸ்ட் ஸ்கூட்டர்.

7. மஹிந்திரா கஸ்ட்டோ

விலை: ரூ. 60,830

இன்ஜின்: 125 சிசி

எடை: 123 கிலோ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 165 மிமீ

மைலேஜ்: 41.5 கி.மீ

 

கெத்து:

வசதிகள், ஃப்ளிப் கீ, சீட் அட்ஜஸ்ட், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன்

 

வெத்து:

சர்வீஸ் நெட்வொர்க்

 

கடைசியா என்ன சொல்ல வர்றோம்னா?


வசதிகள்தான் கஸ்ட்டோவின் நிஜ கெத்து. கார் சாவி போலவே இருக்கும் ஃப்ளிப் கீ-யில் ஃபைண்ட் மீ அலார்ம் இருப்பதால், கூட்டமான பார்க்கிங்கில் ஸ்கூட்டரைக் கண்டுபிடிப்பது ரொம்ப ஈஸி. ஸ்கூட்டர்களிலேயே முதன் முறையாக சீட் அட்ஜஸ்ட்மென்ட் கொண்டது கஸ்ட்டோதான். மேலும், சீட்டும் நீளமாக இருப்பதால், (29 இன்ச்) ஒரு குடும்ப ஸ்கூட்டராகவும் விளங்குகிறது. உயரமானவர்கள், குறைவானவர்கள் என்று யார் வேண்டுமானாலும் கஸ்ட்டோவைக் கிளப்பிக் கொண்டு போகலாம். ஆனால், சர்வீஸ் நெட்வொர்க் குறைவு என்பது கஸ்ட்டோவுக்கு மிகப் பெரிய பலவீனம்.
 

 

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ