Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சைஸ் ஜீரோவாக இருந்தாலும் சிரமம்தான்!

சைஸ் ஜீரோ மோகத்தில்  டயட், ஜிம் என்று தவம்கிடக்கும் பெண்கள், மீடியம் சைஸ் டாப் அணியப்போகும் அந்தப் பொன்னான நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். 

அதற்கு முன் ஒல்லிப் பெண்களின் பிரச்னைகளையும் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...

  • ஊரிலிருக்கும் ஆன்ட்டியிலிருந்து, வீட்டுக்கு ஊறுகாய் விற்கவரும்  பாட்டிவரை அவர்களிடம் கேட்கும் ஒரே கேள்வி, 'சாப்பிடவே மாட்டியா?' (ஆனால், கழுத்துவரை சாப்பிட்டு டயர்டாகிக் கிடப்பது அவர்களுக்குதான் தெரியும்).
  • ஒல்லிப் பெண்களுக்கு உலக மகா பிரச்னையே தங்களது சைஸுக்கு ஏற்ற டிரெஸ் எடுப்பதுதான். ஸ்மால் சைஸ் எடுத்தாலும் லூஸாகவே இருக்கும். டெய்லர்தான் காப்பாற்ற வேண்டும். (ரெண்டு இன்ச் பிடிச்சுக்கொடுங்கண்ணா!)
  • ஒல்லியாக இருப்பதால் பாதங்கள் பெரிதாகத் தெரியும். அது டொனால்டு டக் போன்ற தோற்றம் கொடுக்குமோ என்று மனசுக்குள் மருகுவார்கள். (குவாக் குவாக் அவ்வ்!)
  • பிளாஸ்டிக் சேர், மர சேரில் எல்லாம் அவர்களால் சொகுசாக உட்கார முடியாது என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். எலும்புகள் 'நறுக் நறுக்' எனக் குத்தும்.  (இதுவும் சதி பண்ணுதே!)

 

  • சேவை மனப்பான்மையில் அன்னை தெரசாவாகவே இருந்தாலும், அவர்களால் ஒரு சொட்டு ரத்தம்கூட தானமாகக் கொடுக்க முடியாது. 'எடை ரொம்பக் குறைவா இருக்கு. நல்லா சாப்பிட்டு தெம்பா வாங்க' என கையில் பன் கொடுத்து பத்திவிட்டுவிடுவார்கள். (முதல்ல உங்க உடம்பை பார்த்துக்கோங்க!)
  • பேன்ட் பெரிதாக இருந்தால் பெல்ட் அணிந்து மேனேஜ் செய்வது உலக வழக்கம். அவர்களுக்கோ பெல்ட்டே பெரிதாக இருக்கும். இருக்கும் துளைகளுக்கு மேலும் துளைகள் தேவைப்பட, சிக்கெடுக்கியை வைத்து எக்ஸ்ட்ரா துளைகள் ஏற்படுத்திக்கொள்ளும் துயரம் அவர்களுடையது. (என்னா... டீட்டெயிலு!)
  • காராச்சேவு, குர்குரே, சாக்பீஸ் என அவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கும்போது மட்டும் அனைவருக்கும் கற்பனை ஊற்றெடுக்கும். காற்று பலமாக அடிக்கும்போது, ' பறந்துடாதே பக்கி' ரக கவுன்டர்கள் வேறு.(வேணாம்... விட்ருங்க... அழுதுடுவோம்!)
  • ஒல்லியாக இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிட்டாலும் குற்றம், குறைவாகச் சாப்பிட்டாலும் குற்றம். 'நல்லாதான் சாப்பிடுற? ஆனா, சாப்பிடுறதெல்லாம் எங்கே போகுது?', 'கிள்ளிச் சாப்பிடாத, அள்ளிச் சாப்பிடு' என்று எப்படிச் சாப்பிட்டாலும் பேசும் உலகம் பேசத்தான் செய்யும். (ஒரு வாய் சாப்பிடக்கூட எவ்ளோ படவேண்டியது இருக்கு லார்டு!

இவர்கள் கஷ்டங்களைக் கேட்கும்போது  உங்களுக்கே கண்ணு வேர்க்குதுல்ல?!

-ப.சூரியராஜ்

 

 


எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ