Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழுக்கிவிழப் பிடிக்குமா ஜெனிஃபர்?!

ஹாலிவுட்டின் செல்ல ஹீரோயின் ஜெனிஃபர் லாரன்ஸ், லண்டனில் நடைபெற்ற 'எக்ஸ்மேன் ப்ரீமியர் ஷோ' வில் தடுமாறி கீழே விழப்போனதும், அருகில் இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்ததும் பரபரப்பாகியுள்ளது. 
 
 
'தி ஃபீவர்', 'லைக் கிரேசி', 'தி ஹங்கர் கேம்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஜெனிபர் லாரன்ஸ். 22  வயதாகும் இந்தக் கவர்ச்சிப் புயல், 'எக்ஸ்மேன் ப்ரியமர் ஷோ' வில்,  கூட்டத்தின் நடுவே இறுக்கமான வெள்ளை நிற கவுனில் மிதந்து வந்து, படியேறும்போது தடுமாறி கிழே விழப்போனார். அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடிக்க, அந்த புகைப்படங்கள் இப்போது நெட்டில் சுற்றுகின்றன பரபரப்பாக. 
 
'ரெட் கார்ப்பட்' என்றாலே ஏழாம் பொருத்தம்போல ஜெனிஃபருக்கு. ஒருமுறை, இரண்டு முறை அல்ல, இத்துடன் நான்கு முறை வழுக்கி விழுந்துள்ளார். 
 
* 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுவிழாவில், வெள்ளை நிறத்தில்  பெரிய கவுன் அணிந்து வந்தவர், மேடைக்கு ஏற முயன்றபோது  படிக்கட்டிலேயே தடுமாறி விழுந்தார்.
 
 
 
* 2014-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் பங்கேற்க சிவப்பு நிற கவுனில் வந்தவர், மேடையில் ஏற முயன்றபோது தடுமாறினார். 
 
 
* 2014-ம் ஆண்டு 'எக்ஸ்மேன் ப்ரிவியூ ஷோ'வுக்கு கருப்பு நிற கவுனில் வந்து தடுமாறியவரை, அருகில் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்தார்கள். இம்முறை வெள்ளை கவுனில்!  
 
 
இப்படி தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் தடுமாறி விழுந்து, 'ரெட் கார்ப்பட்  ஃபாலிங் ஸ்டார்ஸ்' என்று ஜாலி கேலி டாலி ஆகியுள்ளார் ஜெனிஃபர்! 
 
- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ