Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விண்டேஜ்...ரெட்ரோ... பழைய ஸ்டைல்களில் பெண்களை அசத்தும் 'டிசைனர் பிளவுஸ்கள்!'

லகில் பரந்து விரிந்து கிடக்கும் ஆடை வரலாற்றுப் பக்கங்களில் சென்று பார்த்தால், பெண்களுக்கான உடைகள் நிறைந்த பக்கங்கங்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

உடல் மூடிக் கிடக்கும் ஆடை வகைகளின் விதவிதமான மாற்றங்கள், ஒரு சுழற்சிக்கு உட்பட்டே ஃபேஷன் உலகில் இடம் பிடித்துள்ளன. இன்று வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த ஃபேஷன் பரேடில் முதலிடம் பிடிப்பது பெண்கள் அணியும் பிளவுஸ், ஜாக்கெட், ரவிக்கை என்றெல்லாம் அழைக்கப்படும் புடைவைக்கான மேல்சட்டைகள்தான். எத்தனையோ வெஸ்டர்ன் ஆடைகள் தமிழகப் பெண்களின் ஃபேஷன் வார்ட்ரோப்பில் இடம்பிடித்திருந்தாலும் பிளவுஸ்களின் மவுசு குறைவதே இல்லை.

 
வேத கால 'கஞ்சுக்கா' எனப்படும் மெல்லிய மேலாடை தொடங்கி,  இன்றைய டிசனைர் பிளவுஸ் வரையில் இவற்றின் பரிமாண வளர்ச்சி, ஆண்களின் பர்சினை பதம்பார்த்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அரைக்கை, முழுக்கை, பஃப், முக்கால் கை, ரெட்ரோ ஃபேஷன் என்பதான இந்த ஆடை, மீண்டும் டிசைனர் பிளவுஸ் என்ற பெயரில் முக்கால் கை ஃபேஷனுக்கே பெண்களைத் திருப்பியுள்ளது. பேஷன் என்பதில் பழமை என்பதே கிடையாது என்பதைத்தான் இந்த சுழற்சி முறை பிளவுஸ்கள் பிரதிபலிக்கின்றன.
 
சாண்டில்யன் வரைந்த 1400 களின் யவன ராணி முதல் மன்னாராட்சி கால அரசிகள் வரை பூந்துகில், கச்சை என்பதான கையில்லாத ஒற்றைத் துணி மேலாடைகளை உபயோகித்துள்ளனர். அது பட்டு, பருத்தி ஆகிய துணி வகைகளில் நெய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் மஸ்லின் துணி, புடவைகளுக்கு பூப்போட்ட பிளவுஸ்கள் அழகு சேர்த்து வந்துள்ளன. 1890 களுக்கு முன்பாகவே எம்ராய்டரி செய்த பிளவுஸ்கள் பெண்களால் அணியப்பட்டு வந்துள்ளது. பழங்கால பெண்களின் புகைப்படங்களில் கூட 'வின்டேஜ்' எனப்படும் கையை இறுகப் பிடிக்கும் வகையிலான ரவிக்கைகளை பெண்கள் அணிந்துள்ளனர்.
 
 
 
1900 களின் அகமதாபாத் பெண்கள், கோடு போட்ட துணிகளில் தைக்கப்பட்ட,  முதுகிற்கு மேல்புறமே முடிச்சுப்போடும் வகையிலான பஃப் வைத்த ரவிக்கைகளை அணிந்திருந்துள்ளனர். 1930 களில் தமிழகத்தில் மேல்தட்டு பெண்களிடம் முன்புறம் அழகான டோரிக்கள் தொங்கவிடப்பட்ட ஜரி பார்டர் பிளவுஸ்கள் புகழ்பெற்றிருந்துள்ளது.
 
40களின் தொடக்கத்திலேயே ரவிக்கை அணியாத காலகட்டத்தில் இருந்து வெளிவந்திருந்த தமிழக கிராமப் புற பெண்கள் கழுத்து வரை மூடிய பருத்தி ரவிக்கைகளையும், சீட்டித் துணி எனப்பட்ட சித்திரப் பூக்கள் நிறைந்த துணியில் உருவான பிளவுஸ்களையும் அணியத் துவங்கி இருந்தனர். ராஜஸ்தானி பெண்கள், தோள்பட்டையில் இருந்து கை வரையில் கூடை போல் மூடும் வகையிலான ரவிக்கைகளை சில்க் துணியில் தைத்து அணிந்திருந்தனர்.
 
 
'எட்வர்டியன் ஸ்டைல்' எனப்படும் மெல்லிய பனியன் துணியில் கழுத்து வரை மூடி, கைகள் விரிந்து, நுனியில் சாட்டின் பூக்களால் பார்டர் அமைக்கப்பட்டிருந்த பிளவுஸ்கள் ஃபேஷன் உலகினை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது எனலாம். கைத்தையல் மூலமாகவே, உயர்தர துணிகளில் வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ் வகைகள், இன்றைய டிசனைர் பிளவுஸ்களை விட அருமையானவை.
 
ரெட்ரோ காலகட்டம் 70களில் சக்கை போடு போட்டது. கையில்லாத பிளவுஸ்கள்தான் இந்த லுக்கில் பிரதானமாக இடம்பிடித்திருந்தன. முழுக்கை மூடிய, இறுக்கிப் பிடிக்கும் வகையி்லான ஃபுல் ஸ்லீவ் ரவிக்கைகள் இதில் இடம் பெற்றிருந்தன. அதன்பின்னர் குட்டியான கை வைத்த பிளவுஸ்கள் 21 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பெண்களிடையே வைரலாகத் தொடங்கியிருந்தது. டிசைனர் பிளவுஸ்கள் உள்நுழையத் துவங்கியிருந்த காலகட்டமும் அதுதான்.
 
 
அதுவரை தனியாக துணி வாங்கி பிளவுஸ் தைத்தது மறைந்து, புடைவையுடன் இணைந்த ரவிக்கைகளும் பெண்களிடம் அச்சமயத்தில்தான் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. சின்னச் சின்ன எம்ப்ராய்டரிகள் நிறைந்த பிளவுஸ்கள், கல்யாண வைபோகங்களில் மணமகளை அலங்கரித்து வந்தது. லக்னோ, ராஜஸ்தான் வேலைப்பாடுகள் பட்டுப் புடவைகளில் அறிமுகமான பின்னர், இன்றைய டிசைனர் பிளவுஸ் உலகு, விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. 
 
 
ஆரி, ஜர்தோசி, குந்தன், ஜரி எம்ராய்டரி வேலைப்பாடுகளுடன், எல்லா காலகட்ட பிளவுஸ் வடிவங்களையும் கலந்து கட்டி இன்றைய டிசனைர் பிளவுஸ்கள் உருவாக்கப்படுகின்றன. மாப்பிள்ளை இருக்காரோ இல்லையோ, டிசனைர் பிளவுஸ் அவசியம் என்பதாகத்தான் இன்றைய திருமணங்களில் டிசைனர் ரவிக்கைகளின் தாக்கம் இருக்கின்றது. முக்கால் கை வரையிலான பட்டுத் துணி பிளவுஸ்களில் ஜரி நூல் வேலைபாடுகளுடன், கற்கள் பதித்த டிசைனர் பிளவுஸ்கள்தான் தற்போது திருமண விழாக்களில் பெண்களிடம் பிரதானம்.
 
'கஸ்டமைஸ்டு பிளவுஸ்கள்'  என்னும் நமக்கே நமக்காக பிரத்யேகமாக உருவாகும் டிசைனர் பிளவுஸ்கள் மணமகளை மட்டுமல்லாமல் எல்லாப் பெண்களையும் தேவதையாக்கும் வேலையைச் செய்து வருகின்றது. நகைக்கு நிகராய் ஜொலிக்கும் வகையில் கற்கள் பதிக்கப்படும் இந்த டிசைனைர் பிளவுஸ்கள்,  விதவிதமாய், ரகரகமாய் 500 ரூபாயில் துவங்கி லட்சங்களில் முடிவடையும் விலைகளில் இன்றைய பேஷன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. 
 
"லட்ச ரூபாயா...?"என்று ஏக்கப் பெருமூச்சு விடும் பெண்களுக்கும் 1000 ரூபாய் ரேஞ்சில் கூட அழகான வடிவமைப்புகள் நிறைந்த பிளவுஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. இன்றைய பரபரப்பான டிரெண்ட்,  கைக்குள் கைவைத்த டிசைனர் பிளவுஸ்கள்தான்.
 
மொத்தத்தில் சுற்றிச் சுற்றி பழமையும், புதுமையும் கலந்து கட்டி உருவாகும் டிசைனர் பிளவுஸ்கள்தான், புடவை உலகில் புதுமை விரும்பும் பெண்களுக்கான உச்சகட்ட ஹாட் ஃபேஷன்!
 
- பா.விஜயலட்சுமி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close