Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்டர் ஸ்டாண்ட்... ஈஸிதான் தோழியரே...!

 
ஷாப்பிங் செல்வது, மேக் -அப் போடுவது போன்று பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஸ்கூட்டர் ஓட்டுவதும் ஒன்று. ஆனால், அந்த சந்தோஷத்தை முழுவதும் அனுபவிக்கவிடாமல் செய்வது 'சென்டர் ஸ்டாண்ட்கள்'தான். சென்டர் ஸ்டாண்ட் போடும்போது மட்டும் பெண்களின் முகத்தில் மரண பீதி, பவுடரை ஓவர்டேக் செய்யும். ஆனால், சென்டர் ஸ்டாண்ட் போடுவது ரொம்பவே ஈஸி பொண்ணுங்களா...!
 
 
 ‘தில் இருந்தா சென்டர் ஸ்டாண்ட் போடுங்க பார்ப்போம்!’ என ஆபீஸ் டியூட்டியில் இருந்த சில பியூட்டிகளிடம் ஒரு ஸ்கூட்டரோடு ஆஜரானோம்.
 
எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் 'சென்டர் ஸ்டாண்ட்' போட முடியாமல் வெட்கப்பட, வேதனைப்பட, துக்கப்பட, துயரப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
 
'அடப் போங்க லேடீஸ்...சென்டர் ஸ்டாண்ட் போடுறது ஒண்ணும் கம்பசூத்திரமில்லை, ரொம்பவே ஈஸி..!'
எப்படினு கேட்கிறீங்களா? ஸ்டாண்டில் காலை வைத்து லேசாக பிரஷர் கொடுத்தாலே ஸ்கூட்டர் அதுவாக பின்னால் போய், ஜம்முனு உட்கார்ந்து கொள்ளும். இதற்கு ஹேண்ட் பார் நேராக இருந்தால் இன்னும் சிம்பிள்!
 
 ‘அது சரி; ஸ்கூட்டர்லதான் சைடு ஸ்டாண்ட் இருக்கே... எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்?’ என்று நீங்கள் குதர்க்கக் கேள்வி கேட்பது புரிகிறது. வாகனங்கள் தயாரிக்கும்போது, தேவையில்லாத விஷயங்களைச் சேர்க்க மாட்டார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அதேபோல்தான் சென்டர் ஸ்டாண்ட் போடுவதால் பைக்குகளுக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கும். 
 
 
* வெயில் நேரங்களில் சென்டர் ஸ்டாண்ட் போடுவதால், பின் பக்க டயர் தரையில் பதிந்து சூடாவது தவிர்க்கப்படுகிறது. நம் ஊர் வெயிலுக்கு டயர் உருகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
* பேட்டரியில் உள்ள கெமிக்கல்ஸ், சைடு ஸ்டாண்ட் போடுவதால் சரிந்து லீக் ஆகி, பேட்டரியின் ஆயுள் சீக்கிரம் முடிய வாய்ப்புண்டு. சென்டர் ஸ்டாண்ட் மட்டுமே போடப்பட்டு வந்தால், பேட்டரியின் ஆயுள் 'ஆமை' மாதிரி நீட்டிக்கப்படும்.
 
 
* பைக்குகளில் பிரச்னை இல்லை. ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டிக் கியர் என்பதால், மேடு பள்ளங்களில் பார்க் செய்வதற்கு, விஜய் படங்கள் ரிலீஸ் ஆவது மாதிரி ஏகப்பட்ட சிக்கல்களை அனுபவிக்க வேண்டும். அப்படியே கஷ்டப்பட்டு பார்க் செய்தாலும், வாகனம் சரிய/உருள வாய்ப்புண்டு. ஆக்ஸஸ், ஆக்டிவா, ஜெஸ்ட் போன்ற ஸ்கூட்டர்களில் இதற்காக ‘பிரேக் லாக் கிளாம்ப்’ உண்டு.
 
 
* சைடு ஸ்டாண்ர்ட் போட்டு பார்க் செய்த வண்டியில், சிலர் பட்டறையைப் போட்டு அமர்ந்துவிடுவார்கள். அவர்களது எடை தாங்க முடியாமல் ஸ்டாண்ட் வளைந்து, மண்ணுக்குள் புதைந்து வண்டியே விழுந்துவிடவும் வாய்ப்புள்ளது.
 
 
* சைடு ஸ்டாண்டில் உள்ள ஸ்பிரிங் செயலிழந்துபோனதால், ஸ்கூட்டர் ஓட்டும்போது தடாலென தரையில் விழுந்து ஓட்டுபவர் மண்ணைக் கவ்விய சம்பவங்கள் நிறைய உண்டு.
 
* எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் - சென்டர் ஸ்டாண்ட் போட்டால் ஜென்மத்துக்கும் நல்லாருக்கலாம்னு ஒரு பழமொழிகூட! பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது... சும்மா ஒரு தடவை சென்டர் ஸ்டாண்ட் போட்டு ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்!
 
 
- தமிழ், கிருஷ்ணவேணி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
 
வீடியோவிற்கு: 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ