Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹேர் கட் செய்யப்போகும் பெண்களுக்கு 10 டிப்ஸ்!

ஹேர் கட் செய்யப் போகிறீர்களா தோழிகளே....? இதோ சில டிப்ஸ்....

1. நாளை காலையில் நீங்கள் ஹேர் கட் செய்யப்போகிறீர்கள் என்றால்,  உங்களுக்கு சைனஸ் , ஜலதோஷம் பிரச்னைகள் இல்லையெனில் இரவில் ஷாம்பூ செய்து கொள்ளுங்கள். இல்லை மாலை எனில், முடிந்த வரை ஹேர் கட் எடுத்துக்கொள்வதற்கு ஆறு மணி நேரம் முன்பு ஷாம்பு செய்து கொள்ளுங்கள். காரணம். எவ்வளவு ஷாம்பு செய்து கொண்டாலும் இப்போது இருக்கும் தூசிகளுக்கு நம் தலை முடி 12 மணி நேரமே அதிக பட்சம் சுத்தமாக இருக்கும்.

2. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஹேர் ஸ்டைலை மாற்றுவதால் முடியின் ஆரோக்யம் அதிகமாகும். ஒரே ஸ்டைல் கொஞ்சம் போரும் கூட. மாற்றிக்கொண்டே இருங்கள்.

3. உங்கள் முக வெட்டு என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஓவல், வட்டம், நீளம், சதுரம், முக்கோணம் இதில் எது என்பதை ஆராய்ந்து ஹேர் ஸ்டைலை தேர்வு செய்யுங்கள். முக்கியமாக நம்பிக்கையான மக்களிடம் ஐடியாக்கள் கேளுங்கள். இல்லை இப்போது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களாக ஹேர் ஸ்டைல் மிரர், ஹேர் ஸ்டைல் சலூன் போன்றவை உங்கள் முகத்திற்கு எந்த ஹேர் ஸ்டைல் அழகு என்பதை கண்முன்னே காட்டும். அவற்றை பயன்படுத்தலாம்.

4. முடிந்தவரை வழக்கமான பார்லரையே தேர்வு செய்யுங்கள். புது பார்லர்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள். விழாக்கள். பார்ட்டி வேளைகளில் அவசியம் இதை கடைப்பிடியுங்கள்.

5. எதார்த்தத்தோடு அணுகுவது மிக அவசியம். விளம்பரங்களில் காட்டப்படும் மாடல்களின் ஹேர், நடிகைகளின் முடி என மனதில் நினைத்துக்கொண்டு ஹேர் கட் செய்வதை தவிர்க்கவும். காரணம் அவர்களின் முடி பராமரிப்பு சமாச்சாரமே வேறு. மேலும் விளம்பரங்களில் கேமரா , லைட்டிங் என மிகைப்படுத்தப்பட்டே காண்பிக்கப்படும். அந்த மாயைகளில் அகப்படாமல் இருப்பது நல்லது.

6. முன் நெற்றி கொஞ்சம் அதிகம் இருக்கும் பெண்கள் பியான்ஸே அல்லது எங்கேயும் காதல் ஹன்சிகாவின் 'முன் பேங்ஸ்' ஹேர் ஸ்டைலை டிக் செய்யலாம்.

 

7. பார்லரின் சுத்தம் மிக அவசியம். அதே சமயம் ஒருவருக்கு பயன்படுத்திய கத்திரியை சுத்தம் செய்கிறார்களா, சீப்பு தூய்மையாக இருக்கிறதா ,ஹேர் செட் செய்யும் க்ளிப்புகளின் சுத்தம் என அனைத்தும் அவசியம் செக் செய்ய வேண்டும். இல்லையேல் பொடுகு, பேன் தொல்லைகள் கூட வரலாம்.

8. கடைசியாக ஹேர் கட் எடுத்துக்கொள்ளும் அளவை நோட் பண்ணி வைத்துக்கொண்டு. வளர்ச்சியின் விகிதத்தை அவ்வப்போது செக் செய்யுங்கள். எந்த மாதம் வளர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அந்த மாதத்தின் உணவு வழக்கத்தையும் கண்டறிந்து பின்பற்றலாம். முடிக்கு உணவு வழக்கங்களும் முக்கிய காரணம்.

9. நீளமான முடியை, ஷார்ட் ஹேர் ஸ்டைல் செய்யப்போகிறீர்கள் என்றால் ஒரு மாதம் வரை கூட யோசியுங்கள். வீட்டில் உள்ளோரிடம் ஆராய்ந்து, உங்கள் மனநிலை எப்படி என யூகித்து முடிவெடுங்கள். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் திடீர் முடிவு எடுத்து முடியை இழந்த பின் வருந்துவதும் நடக்கிறது.

10. வேலைக்கு செல்லும் எல்லா பெண்களின் ஏக மனதான தேர்வு ஷோல்டர் லெங்த் ஹேர். முடிந்த வரை அதில் என்ன சேஞ்ச் கொடுக்கலாம், மற்ற பெண்களில் இருந்து எப்படி தனித்துவமாக இருக்கலாம் என யோசித்து ஹேர் கட் செய்யுங்கள். முக்கியமாக பார்லரின் பேக்கேஜ், ஆஃபர் தேர்வுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது நன்று.

 'ஒரு ஹேர் கட் செய்ய இவ்வளவா...?' என்றால், நம் முக அழகின் பெரும்பாலான பகுதி முடியின் வசம் உள்ளது, அதை பராமரிப்பதில் தவறில்லை. கொஞ்சம் சத்தான உணவு, சரியான பார்லர் பராமரிப்பு, கால இடைவெளியில் ஷாம்பு, ஆயில் பாத் இவைகளை எடுத்தாலே போதும். அழகிய கூந்தல் கற்றில் அலைபாயும்.

- ஷாலினி நியூட்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close