Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேன்ஸ் திரைப்பட விழா: சோனம் கபூரின் 10 பெஸ்ட் லுக் புகைப்படங்கள்!

 

 
 
  
கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பங்கேற்ற சோனம் கபூரின் சிறந்த 10 பெஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது, அவரது  ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
தொடர்ந்து 5 வருடங்களாக, கேன்ஸ் திரைப்பட விழா ஃபேஷன் ஷோவில் சோனம் கபூர் அணிந்து வந்த ஆடைகள், ஒப்பனைகள், முகபாவனைகள் ஆகியவற்றை வைத்து, 'சோனம் கபூரின் பெஸ்ட்  லுக் 10  புகைப்படங்கள்'  என்று ரசிகர் ஒருவர்,  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
'சோனம் கபூரின் மறக்க முடியா புகைப்படங்கள் இவை...'  என்று அவருடைய  ரசிகர்களும்  பதிவிட்டுள்ளனர். 
 
2015  ம் ஆண்டு  நடைபெற்ற  ஷோவில்,  ரால்ஃப்  ரூஷோ  நிறுவனம்   வடிவமைத்த   நீல நிறக் கவுனை  அணிந்து  போஸ்  கொடுத்தார் சோனம் கபூர்.
  
 
2014 ம்  ஆண்டு நடைபெற்ற  கேன்ஸ் ஃபேஷன்  ஷோவில்,  லெபனான்   ஆடை வடிவமைப்பாளரின்  கறுப்பு  நிற  ஆடையை  அணிந்து  வந்தபோது,  அரங்கத்தில் இருந்த  புகைப்படக் கலைஞர்களின்  ப்ளாஷ் மழையில் நனைந்தார்.
 
 

2013 -  ம் ஆண்டு   நடைபெற்ற விழாவில்  பிரபல ஆடை வடிவமைப்பாளர்  அனாமிகா  கன்னா வடிவமைத்த   பாரம்பர்ய  மரபை  எடுத்துரைக்கும்  'குந்தன்  நாத்'  ஜாக்கெட்  அணிந்து   வந்தது  பார்வையாளர்களை  வெகுவாக  கவர்ந்தன   . 

 

2012 ல்  கேன்ஸ்  விழாவுக்கு  வருவதற்கு முன்,  பிரபல  மரினி   ஆடை  நிறுவனத்திற்காக  சோனம் கொடுத்த போஸ்தான் இது.

2011 ம் ஆண்டு  நடைபெற்ற  விழாவில்,  பிரெஞ்ச் ஆடை வடிவமைப்பாளர்  ஜீன் பால் கல்சர்  வடிவமைத்த  வெள்ளை நிறக்  கவுனை  அணிந்து  வந்து,   முதன்முறையாக   கேன்ஸ்   விழாவில்  சோனம்  பங்கேற்ற படம்தான் கீழே உள்ளது.

  -கே.புவனேஸ்வரி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ