Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினமும் 8 ஆயிரம் ரோஜாக்கள்.... சோனல் சௌகானை சொக்க வைக்கும் ரசிகர்!

பிரபல மாடல், பாடகி  மற்றும் மனதை கொள்ளை அடிக்கும் நடிகையான  சோனல் செளகானுக்கு, தினமும் காலை அவரின் முகம் தெரியாத ரசிகர் ஒருவர், 8 ஆயிரம் ரோஜாக்களை பரிசாக அனுப்பி  அசத்துகிறார்.
 
 
 
அந்தப் பிரியத்தில் பூக்களோடு பூக்களாக பூத்துப்போகும் சோனம், அவர் யார் என்பதை அறிய ஆவலாக உள்ளார். ஆனால் அவரோ, 'குயில் பாடலாம் தன் முகம் கட்டுமா...' என்று சோனலின் வீட்டை ரோஜாவனமாக ஆக்கிக்கொண்டே இருக்கிறார் அசராமல்! 
 
 
பாலிவுட் ஹிட் படமான 'ஜன்னத்' படத்தின் நாயகியான சோனம், 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கோலிவுட்டிலும் கால் பதித்தவர்.  எல்.ஜி, ரிலையன்ஸ், சி.டிஎம்.கே, ஹீரோ ஹோண்டா ஃபேஷன் , நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்தவர். 
 
இப்போது சோனலின் செல்லக் கேள்வி இதுதான்...'ரோஜாப் பையா நீ யாரோ..?!" 
 
- சே. சின்னதுரை

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close