Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதனால்தான் நமீதா பிரசாரத்துக்கு அழைக்கப்படவில்லை!


திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நமீதா அ.தி.மு.கவில் சேர்ந்தபோது, அவர் விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவரை பிரசாரத்துக்கு புக் செய்ய, அ.தி.மு.க வேட்பாளர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், ஸ்டார் பேச்சாளர்களில் அவர் பெயர் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தனர். 

இறுதிவரை நமீதாவும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்தோம்...
 
''அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது, நமீதாவின் விருப்பம். அவரை பிரசாரத்துக்கு அழைப்பது, தலைமைக் கழகத்தின் முடிவு. அங்கிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை, அதனால் செல்லவில்லை" என்றார் நமீதாவின் உதவியாளர். 
 
இது தொடர்பாக அ.தி.மு.க  செய்தித் தொடர்பாளர் சமரசத்திடம் பேசினோம்.   ''நமீதாவை அழைப்பதா, வேண்டாமா என்பது தலைமைக் கழகத்தின் முடிவு. அடிப்படை உறுப்பினராகச் சேரும் பிரபலங்கள், பிரசாரத்துக்கு வரவேண்டும் என்பதில்லை'' என்றார். 
 
சில அ.தி.மு.க பிரமுகர்களிடம் விசாரித்தோம். ''சீரியஸான அரசியல் மேடையில் பேசும் அளவுக்கு நமீதாவுக்கு பக்குவம் இல்லை. மேலும், அவருக்குத் தமிழ் தெரியாது. எங்காவது எதையாவது பேசி மீம்ஸ், வீடியோ என்று கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது என்று அம்மா நிறுத்தியிருக்கலாம்" என்றார்கள். 
 
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து நமீதாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பு வராதது, நமீதா தரப்புக்கும் தொண்டர்கள் தரப்புக்கும் ஏமாற்றம்தான்.   
 
- கே. புவனேஸ்வரி 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close