Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டுப் போடப் போறீங்களா?.. இந்த 5 விஷயங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்!

ட்டுப் போடுவது நம் உரிமை, கடமை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமாயின் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் போது என்னென்ன விஷயங்களை நாம் கடைபிடிப்போமோ அதே அளவில் மெனெக்கிட வேண்டும்.

தொகுதி மற்றும் பூத்:

முதலில் யாருக்கு உங்கள் ஓட்டு  என்பதை பற்றி முடிவெடுங்கள். பின்னர் உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார், அவர்கள் எந்தெந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என அவர்களைப் பற்றிய ஒரு சின்ன குறிப்பேனும் எடுத்துக்கொண்டு, உங்கள் முடிவு சரிதானா என சிந்திக்க வேண்டியது அவசியம். அடுத்து ஓட்டுப் போடும் பூத் எங்கு இருக்கிறது, எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதையும் முன்பே அறிந்துகொண்டு  செயல்படுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை முதல் நாளே இதுபற்றி கேட்டு வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

நோட்டா:

உங்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை எனில் இப்போதெல்லாம் பயப்பட வேண்டாம். மேலும் பூத்தில் நமக்குத் தெரிந்த கட்சிக்காரர்கள் இருப்பார்களே, எப்படி விண்ணப்பம் கேட்பது என்ற தயக்கம் தேவையில்லை. இப்போது 'நோட்டா' பட்டன்,  ஓட்டுப் போடும் இயந்திரத்திலேயே வந்துவிட்டது. கேள்வியே இல்லாமல் போடலாம். அதே சமயம், உங்களுக்கு அதிலும் சந்தேகம் எனில், ஒவ்வொரு பூத்திலும் தேர்தல் அதிகாரிகள் அல்லது தேர்தல் பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கேட்பது சிறந்தது.

பெண்களுக்கு முக்கிய வேண்டுகோள்:

சிலருக்கு வீட்டுக்கு அருகிலேயே எலெக்‌ஷன் பூத் இருக்கலாம். வீட்டுக்கு அருகில்தானே என இரவு உடை அல்லது நைட்டி அணிந்து கொண்டு செல்லாதீர்கள். காரணம் ஒவ்வொரு எலெக்‌ஷன் பூத்திற்கும் ஊடக கேமராமேன்கள் கேமராவுடன் கண்டிப்பாக வரக் கூடும். அதே சமயம் நீங்கள் ஓட்டுப் போடும் ஒவ்வொரு பூத்திலும், உங்கள் தலைக்கு மேலேயே கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கும் என்பதால், கவனமாக நல்ல உடைகளை உடுத்தி செல்லுங்கள். நாட்டுக்கு செய்யும் கடைமை என்பதை மனதில் வைத்து செயல்படுவோம். (இது ஆண்களுக்கும் பொருந்தும்)

அலைச்சலைக் குறையுங்கள்:

உங்களுக்கு பூத் ஸ்லிப்புகளே கொடுக்கப்பட்டாலும், கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு செல்லுங்கள். எதற்கும் இருக்கட்டும் என்ற பாணியில் ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு இப்படி ஏதேனும் ஒன்று கூடுதலாக கையில் இருக்கட்டும். குடும்பமாக செல்கிறீர்கள் எனில், யாரேனும் ஒருவர் இந்த அடையாள அட்டை போன்ற விஷயங்களைக் கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். நூறு பேர் கொண்ட வரிசையைக் கஷ்டப்பட்டு கடந்துவிட்டு,  கடைசியில் வோட்டர் ஐடி இல்லை, ஐடி கார்டு இல்லை என அலையாதீர்கள். 

ஆரோக்யக் குறிப்புகள்:

உயர் ரத்த அழுத்தம், மயக்கம், சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் தேவையான மருந்து, அல்லது முக்கிய ஆயத்த விஷயங்களை கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். தனியாக செல்லாதீர்கள். சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். முடிந்த வரை குழந்தைகளைக் கூட்டிச் செல்லாதீர்கள். வெயிலின் உக்கிரம் கண்டிப்பாக அவர்களை வாட்டும். வீட்டில் யார் கண்காணிப்பிலாவது பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பிறகு அந்த நபரை ஓட்டுப் போட அனுப்புங்கள்.

கைகளில் தண்ணீர் பாட்டில்கள் அவசியம் இருக்கட்டும். வயதானவர்கள் முடிந்த வரை காலை நேரத்தில் அல்லது மாலை நான்கு மணிக்கு மேல் ஓட்டுப் போடுங்கள். குடைகளை அவசியம் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் வயதானவர்கள், உடல் நிலைசரியில்லாதவர்கள் இருக்கிறார்கள் எனில் பூத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் கேட்டு,  வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுப் போடலாமா எனக் கேட்டு செயல்படுங்கள்.

ஓட்டுப் போடுவது நம் கடமை, உரிமை, மறக்காதீர்கள்! 

- ஷாலினி நியூட்டன் 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close