Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வாங்க சமைக்கலாம் ஜாலியா...!' - ஆன்லைனில் சமையல் சொல்லித்தரும் ஷாகீன்!

பொண்ணுங்களோ, பசங்களோ... இருவருக்குமே வீட்டில் உலகப் போர் நடக்கும் இடமே கிச்சன்தான்... காலையில் அலுவலகத்திற்கு சாதம் வைத்து, தயிர் ஊற்றிக் கிளறி, உருளைக்கிழங்கு பொரியல் செய்வதே ஒரு ரிலே ரேஸ் ஓடிய அசதியைக் கொடுக்கின்றது. இதில் பலபேருக்கு சமையல் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜி...

 
அந்த பயத்தைப் போக்கி, வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்க சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கும் சமையல் பக்கங்கள் ஏராளம்...சுடுதண்ணீர் வைப்பது முதல், சூப்பரான பிரியாணி செய்வது வரையில் இங்கே கற்றுக் கொள்ள முடியும்.
 
அப்படி, சமையலின் மீதான பேரார்வம் காரணமாக,  ’சமூக வலைதளத்தில் நாம ஏன் சமையல் சொல்லிக் குடுக்கக் கூடாது?’ என்று முன்னெடுத்தவர்தான் ஷாகீன் சையத்.
 
 
 
இந்தப் பொண்ணோட வேலையே சிக்கன் பிரியாணி முதல் மட்டன் சுக்கா வரை  ‘ஸ்டெப் பை ஸ்டெப்’ ஆக சமைத்து,  அதனை அழகான போட்டோக்களாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவதுதான். சமையலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் கூட இந்த புகைப்படங்களைப் பார்த்து சுடச்சுட ஒரு சுவையான சமையலை செய்து முடித்துவிட முடியும்.
 
 
" சின்ன வயசில் இருந்து சமையல் எனக்கு உலகமா இருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் இதை வேறொரு தளத்துக்கு எடுத்துட்டுப் போக நினைச்சேன். அதனால்தான் இந்த சமையல் பக்கம் ஆரம்பிச்சேன். இதோ இன்னைக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், மற்ற நாடுகளிலும் என்கிட்ட சமையல் கத்துக்கிறாங்க' என்று பெருமையாக சொல்கிறார் ஷாகீன்.
 
 
ஆலு பராத்தா, காராச்சேவ், பிரியாணி, சிக்கன் கறி என்று இவரது பக்கத்தில் எந்த ரெசிப்பியை வேண்டுமானாலும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு ரெசிப்பி ஏதேனும் வேண்டுமென்றாலும் அவரிடம் தெரிவித்துவிட்டால், அதை சமைத்து பதிவேற்றுவார் ஷாகீன்.
 
அப்புறம் என்ன... சண்டேஸ்ல இனி கரண்டியும், கையுமா ரெடியாயிடுங்க!
 
-பா.விஜயலட்சுமி
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ