Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொண்ணுங்க செல்போனை எப்படி, எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்...?

 

 

1. போன் பேசும்போது, ரொம்ப ஹஸ்கி வாய்ஸ்ல  பேசுறது மட்டும் முக்கியமில்ல... முடிந்த அளவு  குறைவான நேரத்தில் பேசுங்கள். அதிகம் பேச வேண்டும் என்றால்,  ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துங்கள்.

2. மொபைல் சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும்போதே, ரொம்ப சின்சியரா இருக்கேன் என்கிற பெயரில், அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுவது தப்புங்க... இதனால சைட் எஃபெக்ட் வந்தா செல்போன் கம்பெனிக்காரன் பொறுப்பாக மாட்டான். மொபைல் கொதிக்கும் கொதிப்பில், நம் கன்னம் சிவக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

3. மொபைலில் சார்ஜ் மிகக்குறைவாக இருக்கும்போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.
 
4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு, மொபைலை காதுக்கு அருகில் வைத்துப்  பேசுவது செவிப்பறையில் சேதத்தை ஏற்படுத்தி விடும்.
 
5. பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைப்பதை தவிர்க்கவும். முடிந்த அளவுக்கு ஹேண்ட் பேக்கில் அல்லது பர்ஸில் வைத்துக் கொள்வது நல்லது.
 
6.  நீங்கள் உபயோகிக்கும் மொபைலில், பேசும்போது அதிகமாக சூடாகிக் கொண்டே போனால், அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.
 
7. குழந்தைகளிடம், மொபைலை கொடுத்து பேசி கொஞ்ச வைப்பதை கொஞ்சம் தவிர்க்கலாம். இது பெருமைப்படற விஷயம் இல்லீங்கோ.
 
 
8. எந்த நேரமும் மொபைலில் பேசிக் கொண்டே இருப்பதும், நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வந்தால் அலர்ட்டாயிடுங்க. இதுவும் மிகப்பெரிய அறிகுறியாக இருக்கும் கவனம்.
 
9. மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது. தேவையில்லாமல் கடைகளில் தங்களுடைய மொபைல் எண்களை கொடுப்பதை முடிந்த அளவுக்கு தவிர்க்கவும்.
 
10. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகளையோ, மிஸ்டு கால்களுக்கு திரும்பக் கூப்பிடுவதோ கூடாது. இதனால் நாமே பிரச்னையை விலைகொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.
 
11. டூ வீலரோ, காரோ ஓட்டும்போது கண்டிப்பாக ஹெட் செட் மூலமாகவோ,  ஸ்பீக்கரிலோ பேசிக்கொண்டு செல்வதை தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்து.
 
 
12. ரெஸ்ட் ரூமில் பேசிக்கொண்டே 'எல்லா' வேலைகளையும் செய்வதை முதலில் தவிருங்கள். அந்த நேரம் கூட பிஸியாக இருப்பேன் என்று நமக்கு நாமே காட்டிக் கொள்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதனால் கிருமிகள் நம் மொபைலுக்கு காசு கொடுக்காமலே வந்து சேரும். 
 
13. குழந்தைகளிடம் அதிகம்  கேம் விளையாட கொடுக்காதீர்கள். சார்ஜ் குறையும் பொழுது  குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம். குழந்தை உங்களை தொல்லை செய்யாமல் இருக்க, அதனிடம் மொபைலைக் கொடுப்பதை விட அபத்தமான, ஆபத்தான விஷயம் எதுவுமில்லை.
 
14. இரவு நேரத்தில் சார்ஜர் போட்டுவிட்டு காலையில் எடுப்பது போன்ற  பழக்கத்தை கைவிடுங்கள். அதனால் மொபைல் பேட்டரிக்கும் ஆபத்து; நமக்கும் ஆபத்து.
 
15. ஸ்கூட்டியில் அன்டர் சீட் ஸ்டோரேஜில் செல்போனை வைப்பதை முடிந்த அளவுக்கு தவிர்த்துவிடுங்கள். 
 
- வே. கிருஷ்ணவேணி
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close