Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கள் வாழ்வின் 'கதாநாயகர்களுக்கு' சமர்ப்பணம்!

அன்பானவனே....

உடனே சுற்றுமுற்றும் திரும்பி, யார் என்று பார்க்காதே. இது உனக்குத் தகுதியான வார்த்தைதான். என்ன செய்ய, எங்களிடம் இந்த உலகம் உன் குறித்த பிம்பத்தினை தவறாகவே பதிவேற்றி வைத்திருக்கிறது.

இந்த உலகத்தை நான் கண் விழித்து பார்த்த நொடியில், ‘எனக்கு ராஜாத்தி பிறந்திருக்கா’ என்று என் பிறப்பு குறித்து மகிழ்ந்து போனவன் நீ. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தின் வளர்ச்சியையும் பார்த்து பூரித்துப் போனவன் நீ.
 
என் திருமணத்திற்காக உன் ரத்தத்தையெல்லாம் காசாக்கி உன் வாழ்க்கை முழுவதும் சேமித்து வைத்தவன் நீ.
 
 ‘தங்கச்சி பாப்பா என் கூட விளையாடுவாளே’ என்று அம்மாவின்  கருவறைக்குள் நான் இருக்கும்போதே என் வரவுக்காக காத்திருந்தவன் நீ. பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரையில் எனக்கு சம்பளம் இல்லாத காவலாளியாய் பொத்திப், பொத்தி பார்த்துக் கொண்டவன் நீ.
 
காதலனாய் இருக்கும் தருணத்தில், ‘என்னம்மா வயிறு வலிக்குதா? இரு நாப்கின் வாங்கி வந்து தரேன்’ என்று என் மாதவிடாய் வலியைக் கூட குறிப்பால் உணர்ந்து கொண்டவன் நீ.
 
கணவனாய், நான் வேலை முடித்து அலுவலகத்தில் இருந்து தாமதமாய் வரும் வேளையில், நம் குழந்தைகளுடன் என்னையும் குழந்தையாய் நினைத்து சமைத்து அன்புடன் ஊட்டிவிட்டவன் நீ.
 
என்னுள்ளே உருவெடுத்து, இன்று உலகையே புரட்டிப் போடும் திறமை பெற்று என்னை தாயாக கவுரவப்படுத்தியவன் நீ.
 
உன் உருவாக்கத்தின் ஏதோ ஒரு மணித்துளியில், காமத்தின் ஒரு சதவீதம் அதிகமாய் உன்னுள்ளே செலுத்தப்பட்டுவிட்டது.
 
உன் மரபணுக்களிலேயே பெண் என்பவள் அடங்கிப் போக வேண்டியவள் என்ற எண்ணம் உள்ளோடிப் போய்விட்டது. மற்றபடி எங்கள் வாழ்க்கையின் உண்மையான கதாநாயகனே நீதான்.
 
நீ இல்லையெனில் நாங்கள் இல்லை...பெண்களை மட்டுமே போற்றிப் புகழந்தாலும், உன்னை மொத்தமாகத் தூற்றினாலும் அதனையும் அழகாகக் கையாளத் தெரிந்தவன் நீ.
 
ஒருசில ஆண்களுக்காக ஒட்டுமொத்த ஆண்களையும் கெட்டவர்களாக நாங்கள் சித்தரித்திருந்தால் மன்னித்துவிடு...என்றும் மாறாத அன்புடன் எங்கள் இனிய தோழனாய் இரு... 
 
அத்தனை ‘ஆண்களுக்கும்’ சமர்ப்பணம்!
 
- பா. விஜயலட்சுமி
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ