Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டெடி பியர்' உங்களுக்கு தூக்க மாத்திரையா கேர்ள்ஸ்?

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்?’ங்கறதுக்குக்கூட அடுத்த வருஷம் ஆன்ஸர் கிடைச்சிடும்... ஆனா, பொண்ணுங்களுக்கு ஏன் டெடி பியர் பொம்மை பிடிக்குதுன்னு 30 வது நூற்றாண்டு வரைக்கும்கூட யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. 

அது என்ன மாயமோ புரியலை... இந்தப் பொண்ணுங்களுக்கு தூக்கத்தைவிட ரொம்பப் புடிச்சது டெடி பியர் என்னும் கரடி பொம்மைங்கதான். ‘லவ்வரைக்கூட விட்டுக் கொடுத்துடுவோம்... ஆனா டெடி பியரை விட்டுக் கொடுக்கமாட்டோம்’னு கோரஸா சொல்ற லேடீஸ்  ரொம்ப அதிகம். 

இதைத் தெரிஞ்சுக்கிட்ட சில பசங்க ஒரு படி மேலே போய், ‘டெடி பியர்’ பொம்மைங்களை வெச்சும் புரபோஸ் பண்ணின சம்பவங்களும் உண்டு. என்னதான் பசங்க உயிரைக் கொடுத்து, வெயில்ல அலைஞ்சு டெடிபியர் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தாலும், கட்டிப்பிடிக்கிறது, ‘உம்மா’ கொடுக்கிறது எல்லாமே டெடிபியர்ஸுக்குத்தான் போய்ச் சேரும். (பாவம் பசங்க!)
 
அப்படி என்னதான் இந்த ‘டெடி பியர்’ பொம்மைகளுக்கும், பொண்ணுங்களுக்கும் தீராத காதல்? ஏன்  இப்படி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதுன்னு பார்க்கலமா....
 
 
பொண்ணுங்களுக்குத் 'தனிமை' அப்படிங்கற விஷயம் ரொம்ப புடிக்கும். ஆனா, தூங்கறப்ப அம்மா மடியில் படுத்துக்கிற ஒரு சுகம் அவங்களுக்கு எத்தனை வயசானாலும் வேணும்! அதைக் கொடுக்கறது புசுபுசுன்னு இருக்கும் டெடி பியர் பொம்மைங்கதான்.
 
பெரும்பாலும் கட்டிப் பிடிச்சுட்டுத் தூங்கறப்போ, நம்ம கூட மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர் இருக்கற உணர்வை, தலையணையைவிட டெடி பியர் பொம்மைகள்தான் அதிகமா கொடுக்குதாம். அன்பை வெளிப்படுத்தற ஒரு உருவம்,  டெடி பியர் பொம்மைகளுக்கு இருக்கறதாலதான் பெண்களுக்கு அது அவ்ளோ பிடிச்சுருக்கு.
 
‘‘முக்கியமா, அது நாங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கும், திருப்பிப் பேசி எங்களைக் கோவப்படுத்தாது!’’ - அப்படிங்கறாங்க பொண்ணுங்க...!
 
 
‘‘ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட மட்டும்தான், சில ஃபீலிங்ஸைக் கொட்டி அழ முடியும். அப்படிப்பட்ட நேரங்களில் எப்படிப்பட்ட ஃபீலிங்ஸையும் எங்க டெடி பியர் செல்லங்கள்தான் காது கொடுத்துக் கேட்பாங்க!’’ என்றும் ஃபீலிங் காட்டுகிறார்கள் பெண்கள். 
 
எல்லாம் சரி... ஒரு வேளை நிஜமாவே உண்மையான கரடியைக் கொண்டு வந்து பரிசா கொடுத்தா, இந்தப் பொண்ணுங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? தெறிச்சு ஓடுவாங்களா... இல்லை,  'ச்சோ... ஸ்வீட்!'னு கட்டிப் பிடிச்சுப்பாங்களா?
 
நாங்க சொன்னோம்னு காதலிக்கிட்டயோ, தோழிக்கிட்டயோ டிரை பண்ணிடாதீங்கப்பா... அப்புறம் உங்க நிலைமை அந்தக் கரடிக்கே வெளிச்சம்!
 
-பா.விஜயலட்சுமி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ