Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனைவியிடம் கணவன் சொல்லகூடாத எட்டு விஷயங்கள்:

1.உன்னால் முடியாது, உனக்குத்தெரியாது,போன்ற நெகட்டிவ் கமெண்டுகளை கொடுக்காமல் எதையும் செய்து பார் , உனக்கு நான் துணை நிற்பேன்,என்று ஊக்கம் கொடுங்கள்.

2.உங்கள் வீட்டுப் பெண்களின் ஆடைத்தேர்வை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நீ நவீனமாக   இல்லை என்று தாழ்வாகப் பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசனை,விருப்பம்,வசதி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

3.சில பெண்களுக்கு சில கலைகள் அல்லது சில செயல்களின் மீது ஆர்வம் அல்லது திறமை இருக்கும்.அதில் அவர்கள் மேலும் சிறந்து விளங்க ஆர்வம் காட்டும் போது இது உனக்கு தேவையா எனக்கூறி வீட்டில் முடக்காமல்,அவர்கள் அதை கற்றுக்கொள்ள ஊக்கத்தை கொடுங்கள்.

4.பெண்கள் சொல்லும் கருத்துக்களை "உனக்கு எதுவும் தெரியாது"என உதறித்தள்ளாமல், அது சாத்தியமா? என்பதை யோசியுங்கள்.அது நடைமுறைக்கு பொருந்தாத சூழலில் அதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறி புரியவையுங்கள்.

5,பொதுவாக நிறைய பெண்கள் வீடே உலகம் என இருந்துவிடுகின்றனர். அதனால் புதிதாக   பொது இடங்களுக்கு செல்லும் போது, அந்த சூழலில் செயல்பட கொஞ்சம் சிரமப்படுவார்கள்.அப்படிப்பட்ட சூழலில் உனக்கு ’மேனர்ஸ்’ இல்லையா ? என கேட்டு அவர்களின் மனதை காயப்படுத்தாமல், முதலிலேயே எந்த மாதிரியான இடத்திற்கு செல்லப்போகிறோம் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற சில டிப்ஸ்களை வழங்கி அவர்களை அந்த சூழலுக்குப் பழக்கப்படுத்துங்கள்.

6.டிவி நிகழ்ச்சியில் இருந்து சாப்பிடும் சாப்பாடு வரை பெண்களுக்கு என சில விருப்பு, வெறுப்பு இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது உன் இஷ்டத்திற்கு செய்யாதே என்று முடக்காமல்,உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுங்கள்.

7.பெண்களின் உடல்வாகு ஒவ்வொரு பருவத்தில் ஒரு மாற்றத்திற்கு உட்படும் அதனால் அவர்களை குண்டு -ஒல்லி என்று உடல்வாகினை வைத்து வீட்டில் அனைவரின் முன்னால் வைத்தும், கேலி   செய்வததை அறவே தவிர்த்துவிடுங்கள்.

8.உங்கள் குடும்பம் ,உறவினர்கள் நண்பர்கள்,என உங்கள் உறவுக்கான முக்கியத்துவத்தை உங்கள் மனைவியின் உறவுகளுக்கும் கொடுங்கள். அப்புறம் என்ன இனி உங்கள் வீட்டிலும் ஆனந்தம் கொஞ்சி விளையாடும்.

- சு.சூர்யா கோமதி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close