Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தைக்கான உரிமையை வீட்டில் கொடுக்கிறீர்களா?

குழந்தைகளுக்கான உரிமைகள் என்றதுமே பள்ளிக்கூடத்தில், பொதுஇடத்தில் என்றுதான் யோசனை வரும். ஆனால் குழந்தைகளுக்கன உரிமைகள் அது கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே தொடங்கிவிடுகிறதுஅவைப் பற்றி, தோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறுகிறார்.

1. கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா, மாற்றுத் திறனாளியா எனப் பார்த்து இனம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடாமல் காப்பது.

2. கர்ப்பக் காலத்தில் தாய்க்கு சரிவிகித உணவு, தேவையான தடுப்பூசிகள், மனதைப் பாதிக்காத சூழல் ஆகியவையும் அவசியம்.

3. குழந்தைப் பிறந்ததும் தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.

4. குழந்தைப் பிறந்த குறிப்பிட்ட தினங்களில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிக முக்கியமானது, தவறும்போது எதிர்காலத்தில் அதன்பொருட்டு ஏராளமான சிக்கல்களை குழந்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும்.

5. குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையான எடையுடன் தடுப்பூசி, சத்தான உணவுகள் தரப்பட வேண்டும்.

6. குழந்தை பிறந்த 1000 நாட்களுக்குள், வழக்கமான உடல் திறனோடு இருக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை இனம் கண்டு அதற்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

7. குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விடுவோர், குழந்தையின் பாதுகாப்பு குறித்து நூறு சதவிகிதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு குழந்தையை விட வேண்டும்.8. குழந்தைகள் வீட்டில் தங்கள் கருத்துகளை அச்சமற்று பகிர்ந்துகொள்ள்ளும் சூழலும் கல்வி, உடைத் தேர்வு உள்ளிட்டவற்றில் குழந்தையின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும். அதை இனம் கண்டு அங்கீகரிப்பதும் மற்றவரோடு ஒப்பிட்டு குறை சொல்லவும் கூடாது.

10. சிறு குறைகள் இருக்கும் (பேசும்போது திக்குவது போன்ற) குழந்தைகளை, எந்தச் சூழலிலும் புறக்கணிக்காமல் வளர்ப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடாமல் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

11. குழந்தைகளில் ஆண், பெண், மாற்றுத்திறனாளி எனப் பேதம் பார்க்காமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களின் விருப்பங்களை நிராகரிக்கவோ புண் படுத்தவோ கூடாது.

12. குழந்தைகளின் முகத் தோற்றம், பழகும் இயல்பு ஆகியவற்றை வைத்து திட்டவோ, குறைக்கூறவோ கூடாது. (குரங்கு சேட்டையெல்லாம் செய்யறான் என்பதுபோல)

13. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல் மாடல் என்பதால் அவர்களின் முன் தகாத சொற்கள் பேசுவது, சண்டைப் போடுவது என்பதை தவிர்த்து குடும்பத்தில் ஜனநாயகத் தன்மை நிலவுவதை குழந்தைகள் உணரும் விதத்தில் குடும்பச் சூழலை உருவாக்கி தர வேண்டும்.

சின்ன விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பெரும் மாற்றங்களைத் தந்துவிடும். அந்த மாற்றம் நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும் அமைந்துவிடும். மேலே உள்ளவற்றை அவர்களின் உரிமைகள் என்பதாக நினைக்காமல் பெற்றோரின் கடமையாக நினைத்தாலே எந்தச் சிக்கலும் வராது.

 

- வி.எஸ்.சரவணன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ