Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொண்ணுங்க கிளிஷேஸ் இதே தாங்க!

 

பசங்க லைஃப்ல நடக்குற இன்னசெண்ட் கிளிஷேஸ் போலவே,   பொண்ணுங்க லைஃப்ல சதா ஜாங்கிரி சுத்துற கிளிஷேக்களை படிச்சுப் பிறவிப் பயனை அடையுங்களேன்.

* பச்சை, மஞ்சள், ஊதானு ஏதோ ஒரு கலர்ல ரிப்பன் வச்சி ரெட்டைப் பின்னல் போட்டுட்டு போயிருப்போம். அதை எவனாச்சும் ஒரு டவுசர் பாய் இழுத்துவிட்டு வெவ்வவெவேனு பல்லைக் காட்டியிருப்பானே!

* பசங்க கிராஸ் பண்ணும் போது மட்டும் நெத்தியில மோதாத அந்த ஒற்றை முடியை வீம்புக்குனே இழுத்துவிட்டு சரி பண்ணி இருப்போமே!

* சேலையோ தாவணியோ கட்டித்தான் பாப்போம்னு கட்டிக்கிட்டா, அதை அடிக்கடி சரிபண்ணிக்கிட்டே நமக்கு நாமே நம்மையே ரசிச்சிருப்போமே!

* சைக்கிள் பழகுன சமயத்துல சுடிதார் துப்பட்டாவோ இல்லை தாவணி முந்தானையோ சைக்கிள் சக்கரத்துல சிக்கி தொபக்கடீர்னு விழுந்துட்டு சுத்தி முத்தி பாத்து   நகத்தை கடிச்சி துப்பிருப்போமே.

* ’எவ்ளோ நீளமான கூந்தல் இவளுக்கு’னு லைட்டா பொறாமை கொப்பளிச்சதும், அந்த நீளக்கூந்தல் பொண்ணுக்கிட்ட முடி வளர டிப்ஸ் கேட்டிருப்போமே.

 

* ஸ்கூட்டியை ஓட்டிட்டு போனாலும் விழுந்துடுவோம்னு பயத்துல பிரேக்ல கையை வைக்கிறதுக்கு முன்னாடியே ரெண்டு கால்களையும் பெப்பறப்பேனு தரையில ஊன்ற முயற்சி பண்ணுவோமே.

* சரி...சரி..சொல்லக் கூடாது தான்...லைட்டா சாப்பிட்டு வெயிட் போட்ட பின்னாடி டி-ஷர்ட் போடறப்ப எல்லாம் தொப்பையை மறைக்க அடிக்கடி மூச்சை இழுத்து ஸ்லிம் காட்டியிருப்போம். விடுங்க ...இதெல்லாம் ஒருவித கலைதானே.

* தப்பியோ தவறியோ பஸ் படிக்கட்டுக்குப் பக்கத்துல இருக்குற சன்னல் சீட்டுல உட்கார்ந்துட்டா படியில இருக்குற பசங்களோட நோட்ஸ் புக்ஸை எல்லாம் மடியில சுமந்திருப்போம். 

* சீனியர் பையனுக்கோ உங்க பிரதர்ஸ்க்கோ ரெக்கார்டு நோட்ல படம் வரைஞ்சி பாகம் குறிச்சி கொடுத்திருப்பீங்களே..

* கண்டிப்பா ஒருமுறையாச்சும் நீ எல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையானு மைண்ட் வாய்ஸ்லயாச்சும் திட்டி இருக்கணுமே!

*   ஃபேஸ்புக்ல வாரம் ஒருத்தனையாவது பிளாக் செய்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவோமே!

* சூப்பரா சமைப்பேன்னு சொல்லி கார சட்னியை கொடுத்து நண்பனை அழ வச்சிருப்போம்.

* ’ஐ லவ் யூ’னு எவனாச்சும் சொன்னா ஓவரா பிகியூவ் பண்ணுவோம். 

* சும்மா இருக்குற கரப்பான் பூச்சியைப் பாத்து கன்னாபினான்னு கத்தி இருப்போம்.

* ஹீரோயின் போல ஸ்லோ மோஷன்ல மழையில நனையிறது, பட்டாம் பூச்சி பிடிக்கிறது, குச்சி ஐஸை மெதுவா உறிஞ்சிறது..இந்த கொய்யாப் பழத்தைக் கூட அதுக்கே வலிக்காம கடிக்கிறதுனு ஹீரோயின் எண்ட்ரி சீன் எல்லாத்தையும் யாரும் பாக்காதப்ப ட்ரை பண்ணி பாத்திருப்போமே. 

* எல்லாத்துக்கும் மேல இதை நான் சொல்லியே ஆகணும். தினம் ஒரு செல்ஃபியாவது எடுக்கலைனா நம்ம கையெல்லாம் நடுங்கி இருக்குமே!

- பொன்.விமலா

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ