Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்மணிகள் கவனத்திற்கு !

 

வாழ்க்கையை ரீ-ஸ்டார்ட் செய்ய நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்ணா நீங்கள்? நீங்கள் முதலில் டெலிட் செய்யவேண்டியது தாழ்வு மனப்பான்மை. உங்களிடம் அவசியம் தேவை ஆளுமைத்திறன்!

ஆளுமைத்திறன் எல்லாம் ஆண்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும்தான் என்று நினைக்கும் இல்லத்தரசியா நீங்க? உங்கள் குடும்பத்தை, வீட்டு நிர்வாகத்தை, உறவுகளை, நட்பை அரவணைத்துச் செல்ல, அவசியம் தேவையானது ஆளுமைத்திறன்!

ஆளுமைன்னா இன்னாங்கோ.. தெளிவா சொல்லுங்கோ எனக் கேட்குற கண்மணியா நீங்க?!

அதற்கு தேவையான பொருட்களை... சாரி. தேவையான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. படிச்சி ஃபாலோ பண்ணுங்க.

தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் கூடவே கூடாது: ’நாம எல்லார் முன்னாடியும் சரியா பேசிருவோமா? நாம பேசினால் மத்தவங்க கவனிப்பார்களா? ஒருவேளை சிரிச்சிட்டாங்கன்னா?‘ எனத்  தயங்கியே பல இடங்களில் மெளன விரதமாக இருந்து இருப்போம். இந்தத் தயக்கத்தை ‘சைத்தானே அப்பாலே போ’ எனத் தூக்கி போட்ட தன்னம்பிக்கை தானாக வரும். கிடைக்கும் சின்னச்சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அதை செய்து காட்டுங்கள். சொதப்பினாலும் டோண்ட் வொரி. மற்றவர்கள் செய்யாதபோது, நீங்கள் முயற்சியாவது செய்தீர்கள் என பெருமை படலாம்.

டி.வி-க்கு 'நோ' சொல்லிட்டு, புக்ஸுக்கு 'எஸ்' சொல்லுங்க: எவ்ளோ நாளைக்கு தான், சீரியலே பார்க்குறது. ஒரு சின்ன சேஞ்சுக்கு புக்ஸ் படிக்கலாமே. மாற்றம், முன்னேற்றம், வேண்டாமா? செய்தித்தாள், வார இதழ், மாத இதழ் என வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அட! எதுவும் கிடைக்காவிட்டால்.. குழந்தைகளின் ஸ்கூல் புக்ஸையாவது படிங்க. போட்டி தேர்வுகளுக்காவது உதவும். எந்த ஒரு நல்ல புத்தகமும் நம்மளை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களும் நம்பலாம்.

 

தோற்றத்தில் கவனம்: ஆளுமையைப் பொறுத்தவரை நம்மளோட தோற்றம் முக்கியம். நாம் அணியும் ஆடையானது ஃபேஷன் என்பதைத் தாண்டி, இடம், சூழலுக்குத் தகுந்தபடியும், மற்றவர்களின் கண்களை உறுத்தாதவாறும், உங்கள் உடல்வாகுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். அப்படிப் பொருத்தமான ஆடை அணியும்போது இயற்கையாகவே ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்.

அப்டேட் ப்ளீஸ்: இந்த `டெக்கி சூழ்' உலகத்தில் தொழில்நுட்பம் தெரியாமல் ஆளுமையுடன் செயல்பட முடியாது. ‘நான் பார்க்கும் வேலைக்கு அதெல்லாம் தேவையில்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லத்தரசிகள் குறைந்தபட்சம் மெயில் அனுப்புவது, ஆன்லைனில் டிக்கெட் புக்கிங், போனுக்கு ரீசார்ஜ் செய்வது போன்ற அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். வெயிட்... வெயிட்... இதுமட்டும் இல்லை அப்டேட்.. நாட்டுநடப்பு தெரிந்துக்கொள்வதும் இந்த லிஸ்டில்தான் சேரும். அதுனால ஒருநாளைக்கு அரைமணி நேரமாவது நியூஸ் சேனல் பாருங்க. மற்றவர்களுடன் உரையாடும் போது, நாட்டு நடப்பு, அரசியல், சினிமா என நீங்கள் பேசும்போது, விபரம் தெரிந்தஞ்சவங்க என்ற பெயர் கிடைக்கும்.

கேலி , கிண்டலுக்கு தடா: வீட்டிலோ அலுவலகத்திலோ, நெருங்கிய தோழியோ எதையாவது பேசிவிட்டு, ‘ஹே. சும்மா ஜாலிக்கு சொன்னேன்' என்பார்கள். உங்களின் சுயமரியாதையைச் சிதைப்பதாக அந்த ஜாலி வார்த்தைகள் இருந்தாலும் அதை அனுமதிக்காதீர். எல்லாத்துக்கு ஒரு லிமிட் உண்டு என நாசூக்காக பேசி புரியவையுங்கள். அதே நேரம், உங்களின் வார்த்தைகளும் அவ்வாறாக அமையக்கூடாது என்பதை மெமரியில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆர்.யூ. ஓ.கே பேபி: எப்போ பார்த்தாலும் குடும்பம், குழந்தை, வேலை என நீங்கள் ஓடிக்கொண்டு இருந்தால் உங்களை யாரு பார்த்துக்குவா? அதுவும் நீங்கள் தான் !
அதுனால, தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, அந்த நேரத்தில் ஒரு ரூமுக்குள் சென்றுவிடுங்கள். ரூமில் ஆடுவது, பாடுவது, சத்தமாக சிரிப்பது என உங்களுக்கு தோணுவதை செய்யுங்கள். மேலும் நீங்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரம், பாராட்டு கிடைக்கலையே, என் பேச்சை கேட்கலையே என யாரையாவது திட்டுவது என்றால் எதோ பொம்மையை இஷ்டம் போல் திட்டுங்கள், அடிக்க வேண்டும் என்றால் தலையணை எடுத்து அடித்து துவம்சம் செய்யுங்கள். அப்பறம் உங்களை நீங்களே ‘நவ்.. ஆர். யூ. ஓகே பேபி’ என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்போதும் மன அமைதி கொள்ளவில்லை என்றால் மறுபடியும் முதலிருந்து ஆரம்பியுங்கள்.

மன அழுத்ததை குறைக்க இதுப்போன்ற சின்னச் சின்ன செயல்கள் செய்தே ஆகவேண்டும். செய்யாவிட்டால், இந்த ஜில் கிளைமேட்டிலும் உச்சி வெயிலில் நின்றமாதிரி முகம் சிவந்து போயி, ரொம்ப உக்கிரமா இருப்பீங்க. அப்பறம் டென்ஷன், தலைவலி, பி.பி வரும். மருத்துவமனைக்கு அலையனும், செலவு செய்யனும். ஜாக்கிரதை!

வாடி ராசாத்தி என உங்களுக்கு நீங்களே பாடிக்கொண்டு.. ‘36 வயதினிலே’ ஜோதிகா மாறி அப்படி கம்பீரமாக நடந்துப்பாருங்க.. உங்க தன்னம்பிக்கை வேற லெவலுக்குப் போகும்.

- கே. அபிநயா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close