Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்ரோ ரயில்... ஸ்கூட்டி.. எது ஓட்டுறது ஈஸி? மெட்ரோ ரயில் பெண் ஓட்டுநர்களின் பதில்!

செம்படம்பர்  21 புதன் கிழமை அன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை, கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தது. அன்று ரயிலை இயக்கியவர்கள் அம்சவேணியும், நளினியும். அவர்களை சந்தித்துப் பேசினோம்,

ஆர்வமாக பேச ஆரம்பித்தார் நளினி,

'எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர், சரவணம் பட்டி. காந்திபுரத்தில் இருக்கிற ஒரு கல்லூரியில டிப்ளமோ முடிச்சிட்டு,மேட்டுப்பாளையம் KGiSL பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் (ECE) படிச்சிட்டு இருந்தேன். அப்போதான் மெட்ரோ ரயில் சேவைக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்பாதான் பார்த்துட்டு சொன்னார். அதுக்கப்புறம் தேர்வுக்காக விண்ணப்பித்தோம். போட்டித் தேர்வில் கலந்துட்டு தேர்ச்சிப் பெற்றேன்.

 

ஆன் லைனில் தான் தேர்வு எழுதினோம். அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை செய்தப் பிறகு டெல்லியில் DMRC (Delhi metro rail corporation) நான்கரை மாதம் பயிற்சிப் பெற்றோம். இதில் முதல்  3 மாதங்கள் தியரி கிளாஸ், ஒரு வாரம் டிரெயின் டிரையினிங் என சில பயிற்சிகள்  கொடுத்தாங்க. அங்கே என் அப்பா வந்திருந்தார். நிறைய பேர் என்னை பாராட்டினதைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க மதியம் 12.15 க்கும் வெங்கையா நாயுடு வந்திருந்தார். ஆப்ரேட்டிங் அறைக்கு வந்தவர் நீங்கதான் ஓட்டுறீங்களானு கேட்டார் பிறகு  என்னோடப்  பெயரைக் கேட்டார். வாழ்த்துக்கள் சொன்னார். எங்க கூட இருக்கிற ஆண் ஊழியர்கள் இப்போது வரைக்கும் டெக்னிக்கலா எங்களுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு எங்களோட நன்றிகள். அப்பா நான் ஓட்டின ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அம்மாவையும் பயணிக்க வைக்கணும். அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அந்த நாளுக்காக காத்திட்டு இருக்கேன்.'' என்றவரைத் தொடர்ந்து பேசினார் அம்சவேணி,

'எனக்கு சொந்த ஊர் சென்னை, மூலக்கடை. ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில படிச்சேன்.எனக்கு 27 வயசாகுது. இந்த வேலைக்கு முன்னாடி சூப்பர் வைசரா ஒரு கம்பெனியில வேலைப் பார்த்திருக்கேன். அதனால கஸ்டமரை எப்படி அனுசரிச்சுப் போகணும்னு கொஞ்சம் தெரியும். நாங்க எழுதின தேர்வுல 79% பேர் தேர்வாகியிருந்தாங்க. ட்ரெயின் ஆப்ரேட்டர்ஸ், சூப்பவர்வைசர்ஸ் என 120 பேருக்கும் மேல் இந்த மெட்ரோல இருக்காங்க.'' என்றவர்

 

'ரயில் ஓட்டுவதற்கு முன்னாடி நாள், கனவுல எல்லாம் நான் ரயில் ஓட்டுற மாதிரி வந்தது. எங்க சைஸப் பார்த்துட்டு இவங்களால பண்ண முடியுமானு முதல்ல யோசிச்சாங்க. அதற்குப்புறம் நாங்க ஆர்வமா செய்றத பார்த்துட்டு, சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்களால் தூக்க முடியாத வெயிட் எல்லாம் கூட இருந்து உதவி செய்திட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தரின் வாழ்த்தும் எங்களுக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கு. இந்த துறைக்கு நிறைய பெண்கள் வரணும். எங்களுக்கு உதவியாக இருந்துவரும் அனைத்து அதிகாரிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் எங்களுடைய நன்றிகள்.'' என்ற அம்சவேணியிடம், " சரி , ஸ்கூட்டி ஓட்டுவது கடினமா இல்லை ரயிலா என்றால், ஸ்கூட்டி தான் என்கிறார். "எனக்கு ஸ்கூட்டி ஓரளவுக்கு ஓட்டத் தெரியும். ஆனா, அதை விட ரொம்ப ஈஸியான வேலையா ரயிலை இயக்குவதை நினைக்கிறேன். ஏன்னா, இங்கே யூ டர்ன் கிடையாது, டிராஃபிக் கிடையாது. எதிரில் ரயில் வந்து விடுமோங்கற பயம் கிடையாது" என்றார் அம்சவேணி சிரித்துக்கொண்டே

 

-வே.கிருஷ்ணவேணி

படங்கள்: தி. குமரகுருபரன். படம்: ரமேஷ் கந்தசாமி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ