Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலையா... வேலையில் திருப்தியா? மினி சர்வே

 

                                                               

 

'வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்துப்பார்' எனும் பழமொழியில் 'பொருத்தமான வேலையில் சேர்ந்துபார்' என்பதையும் இணைத்துவிடலாம். எந்தப் படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பல்வேறு கால்குலேஷன் போட்டுத்தான் படிப்பைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கிறதா? இன்னும் சிலர், தான் படித்த படிப்புக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வேலைகளைத் தேடிச் செல்கின்றனர். இன்னும் சிலரோ தனக்கேற்ற பொருத்தமான வேலையைத் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இவற்றையெல்லாம் கடந்து, கிடைத்த வேலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சிகளும் பெரும் போராட்டமாக இருக்கின்றன.

பல கனவுகள், கற்பனைகள், ஆசைகளுடன் பள்ளி, கல்லூரி முடித்து எதிர்ப்பார்த்த, எதிர்ப்பாக்காத வேலையில் சேர்ந்திருப்பீர்கள். அப்படி நீங்கள் படித்த, செய்யும் வேலை சார்ந்த ஒரு எனர்ஜிடிக்கான மினி சர்வே இது. சின்சியரா அட்டென்ட் பண்ணுங்க ப்ளீஸ்.

இதோ உங்களுக்கான ஆக்டிவ் சர்வே!

 

கடந்த இருபது ஆண்டுகளை, அதற்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது கல்வி கற்போர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. பத்தில் ஏழு பேர் பள்ளி படிப்பையும், பத்தில் ஐந்து பேர் கல்லூரிப் படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வரும் ஆண், பெண் இருபாலரிலும் சுமார் 50 சதவீதத்தினர் தங்கள் படிப்பு சாராத துறையிலேயே வேலை செய்கின்றனர். இதற்கு படித்த துறையில் ஆர்வமின்மை, வேலையின்மை, சம்பளப் பிரச்னை மற்றும் பல காரணங்களை முன்வைக்கின்றனர். இதிலிருந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்வதில் பெரும்பாலானோருக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை, முடிவெடுப்பதில் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, வேலையில் போதிய நாட்டமின்மை போன்ற காரணிகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. 

 

                                                              

 

'கல்லூரிப் படிப்பை கவனமுடன் தேர்தெடுக்க வேண்டும்; சிறப்பாக படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற வேண்டும்; வேலையில் சிக்கல்கள் பல எழுந்தாலும் தனக்கான துறை இதுதான். இதில் என்ன சிக்கல்கள் வந்தாலும் அவற்றைச் சரிசெய்து மேல்நிலைகளை அடைவேன்' என்ற கொள்கையுடன் செயல்பட்டால் எவ்வித சிரமமின்றி வெற்றிபெற முடியும்.

நீங்கள் ஆர்வத்துடன் பங்களித்த, இந்த சர்வே முடிவைக் கொண்டு, உங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் படிப்பு, வேலைவாய்ப்புகளில் மேன்மையடைவது குறித்த விரிவான கட்டுரை விரைவில் விகடன் குழும இதழ் ஒன்றில் வரவிருக்கிறது.

- கு.ஆனந்தராஜ்

எடிட்டர் சாய்ஸ்