Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவியை நேசிக்கும் கணவரா நீங்கள்? மினி டெஸ்ட்!

 

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் - மனைவி இருவருக்குமான அன்பும் காதலும் அவர்களின் முதுமையிலும் தொடர்ந்தால்தான் அந்தத் திருமணம் வெற்றியடைந்ததாக அர்த்தம். ஆனால் இன்றளவில் பெரும்பாலான திருமணங்கள் விவாகரத்து வரை செல்வதைக் கவனிக்க முடிகிறது.

முதலில் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்கள் உருவானது. நாளடைவில் தனிக்குடும்பங்களும் சிதைந்து கணவன் இருக்கும் நேரத்தில் மனைவி இல்லாமல் மனைவி இருக்கும் நேரத்தில் கணவன் இல்லாமல், குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இருவரும் இல்லாமல் என ரிமோட் வாழ்க்கைக்குள் அடங்கிப் போனது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் என்பது வீட்டைப் பராமரிப்பது, நிதி நிர்வாகம் உள்ளிட்டவற்றை தீர்மானிக்கிறது.

சிங்கிள் பெட் ரூம் அறை கொண்ட வீடுகள் டபுள் பெட் ரூமுக்கு முன்னேறியதும், குழந்தைகளுக்கு தனியறை ஒதுக்கப்பட்டதுமே இந்தத் தலைமுறை கண்ட குடும்பச் சாதனை. மற்றபடி அன்பும் அன்னியோன்யமும் தண்டவாளம் போலவே ஒட்டாமலே பயணிக்கப் பழகிக் கொண்டிருக்கிறோம். கணவன், மனைவியை நேசிக்கவும் மனைவி கனவணை நேசிக்கவும் நேரமில்லாமல் அவசர யுகத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்பை அளவீடு செய்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் நமக்கான ஒரு சின்ன டெஸ்ட் ஒரு சின்ன ரிலாக்ஸை கொடுக்குமே. ஒரு கணவன் மனைவியை எந்த அளவில் நேசிக்கிறார் என்பதை சில சின்ன புரிதல்கள் தெரிந்து வைத்துக் கொள்ள கீழே உள்ள விளையாட்டை க்ளிக் செய்யலாமே!

 

 

 

- பொன்.விமலா



எடிட்டர் சாய்ஸ்

MUST READ