Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செயற்கை இமையை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

நடிகைகள் மட்டுமே செயற்கை இமைகள் பொருத்தி வந்த காலம் மாறி, தற்போது நகரங்களில் கல்லூரிப் பெண்களும் செயற்கை இமைகள் பயன்படுத்துகிறார்கள். இவை 50 ரூபாயில் இருந்து தரத்துக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. கண்களின் மேல் பகுதியில் ஒட்டிக்கொள்வதற்கு  இமையிலேயே பசை இருக்கும். பசை செயலிழந்துவிட்டாலும் இமையைத் தொடர்ந்து பயன்படுத்தும் வண்ணம், தனியாகக் கிடைக்கும் செயற்கை இமைகளுக்கான பிரத்யேகப் பசையை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

 


இந்த ஃபேஷன் பயன்பாடுகள் ஒருபுறம் இருக்க, செயற்கை இமைகள் பொருத்திக்கொள்வதால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும், அவற்றைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சொல்கிறார், கண் மருத்துவ நிபுணர்  பிரவீன். 

* ''கண்களின் ரப்பை பகுதியில் செயற்கை இமைகளை ஒட்டுவதால், கண் நலம்  பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், கண் அலர்ஜி, சரும அலர்ஜி பாதிப்பு இருப்பவர்கள் இவற்றைப்  பயன்படுத்தினால் அரிப்பு, சிவந்து போதல், தடிப்பு, வீக்கம் ஏற்படலாம். 

* செயற்கை இமைகளில் இருக்கும் பசையினால் ஒவ்வாமை ஏற்பட்டால்  கண்களில் நீர் வடியலாம். சமயங்களில் கண்களைக் கசக்கும்போது இயற்கையாக இருக்கும் இமையும் உதிரும். 

* செயற்கை இமைகள் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கண்களைச் சுத்தமான வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* தூங்கும்போது கண்களைச் சுற்றி  விளக்கெண்ணெய்  தடவிக்கொள்வது நல்லது. 

* தரமான செயற்கை இமைகள், அதற்கான பிரத்யேக மற்றும் தரம் கொண்ட பசை ஆகியவற்றைப் பயன்படுத்துவதே நல்லது.'' 

 


- கே.அபிநயா

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்