Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேன்சரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா!

உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் பாதிப்பினால் இறந்துள்ளனர். இந்த வருடம் இந்தியா மற்றும் சீனாவில் தான் அதிக அளவு மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் பாதித்தப் பெண்கள் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்காவில் 50% க்கும் மேற்பட்ட பெண்களும், மங்கோலியா மற்றும் இந்தியாவில் 80% பெண்களும் இந்த இரண்டு நோயாலும் அதிக அளவு  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்  Lynette Denny, இந்த இரண்டு புற்று நோய்களையும் முன் கூட்டியே பரிசோதனை செய்து கண்டறிந்தால் முற்றிலுமாக குணமாக்க முடியும். ஆனால், சில நாடுகளில் அதற்கான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மருத்துவ செலவுத் தொகை அதிகமாக இருப்பதாலும் பெண்கள் இதற்கான பரிசோதனையை முன்பே செய்வதில்லை.

வருடத்துக்கு ஒரு முறையாவது முன் கூட்டியே பரிசோதனையைச் செய்வதன் மூலமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் பெண்கள் இத்தகைய கேன்சரில் இருந்து தப்பிக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளார்  Lynette Denny.  விழிப்பு உணர்வு பலகைகள், விளம்பரங்கள், அரசு மருத்துவமனைகளில் இதற்கான பரிசோதனைகளை எளிதாக்குவது போன்றவற்றில் வாயிலாக மக்களிடம் இந்த விழிப்பு உணர்வை கொண்டு செல்வதன் வாயிலாக பெண்களை தற்போது அதிகம் பாதித்து வரும் இந்த கேன்சர் நோயினை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்றார்.  

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ