Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகம் சந்திக்கும் கருக்கலைப்பு பிரச்னை - அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபா மருத்துவனை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில், 35 வயது பெண்களில் 25% பெண்களுக்கும், 20 முதல் 34 வரையிலான பெண்களில் 8.4% பெண்களுக்கும் கருக்கலைப்பானது எளிதாக நடப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு வருடமாக International Journal of Scientific Research எடுக்கப்பட்ட சர்வே முடிவில் 3,486 க்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கருக்கலைப்பு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதயம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றால்தான் கருவானது தானாகவே கலைந்துவிடுகிறது. தூத்துக்குடி, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனையின் மகப்பேறு மருத்துவர் சுபா சிவகாமி செங்கோடன் இதுகுறித்து, 'அதிக வயதுடையப் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அதிகம் சந்தித்து வருகின்றனர். 100%  குழந்தை பெற்றலில் எந்த பிரச்னையும் வராமல் இருப்பதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக’வும் குறிப்பிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்