Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

9 மாதங்களாக உயர்த்தப்பட்ட அரசு பெண் ஊழியர்களின் பிரசவ கால விடுப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கையில், பெண் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2011–ம் ஆண்டில் நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களில் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக, 1980–ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டிருந்தேன்.

அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். 

அந்த உத்தரவின் பேரில், இரண்டு குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பானது 6 மாதத்திலிருந்து (180 நாட்கள்) இருந்து 9 மாதங்களாக (270 நாட்கள்) உயர்த்தப்படுகிறது. இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அவர்களும் 270 நாட்கள் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம். பிரசவத்துக்கு முன்பு மற்றும் பிரசவத்துக்கு பின்பு என எத்தனை மாதங்கள் விடுப்பு எடுக்கவிருக்கிறார்கள் என்பதை அந்தந்த பெண் ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ