Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹலோ லேடீஸ்... நவம்பர் இரண்டாம் வார ராசி பலன் தெரிஞ்சுக்கலாமா..!?

ஹாய் லேடிஸ்... நவம்பர் இரண்டாவது வாரம் ஒவ்வொரு ராசிகாரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை ராசி பலனாக கணித்து தந்திருக்கிறார் நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி.                                                                                      

மேஷம்

வார முற்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். புதிய சொத்துகள் சேரும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். வாரப் பிற்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். என்றாலும் அவை சுபச் செலவுகளாக அமையும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் தேவை.

                                                                                   

                                                                      
 ரிஷபம்


வார முற்பகுதியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் நலம் பெறுவீர்கள். ஞான மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மனத்துக்கினிய சம்பவம் ஒன்று நிகழும். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபகாரியங்கள் நிகழும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.  ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும்

                                                                                         
 மிதுனம் 


வார முற்பகுதி சோதனையானது. விபத்து, ஆபரேஷன் போன்றவை ஏற்படலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. மறைமுக நோய்நொடிகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். 10-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். பிரச்னைகள் விலகும். பண வரவு கூடும். முக்கியமான காரியம் ஒன்று 11-ம் தேதி நிறைவேறும். 

                                                                                                          
கடகம்

 
எதிர்ப்புகள், குறுக்கீடுகள், தடைகள் இருந்தாலும் அதையும் மீறி முன்னேறுவீர்கள். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. பிள்ளைகளால் சங்கடமும் மன வருத்தமும் உண்டாகும். கணவரால் பிரச்னைகள் சூழும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். 11-ம் தேதி புனிதமான காரியம் ஒன்றில் கலந்து கொள்வீர்கள். பெரியவர் ஒருவர் உங்களுக்கு உதவுவார். 

                                                                                                
 சிம்மம் 


துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும் நேரம் இது. வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். எதிரிகள் பயந்து ஒளிவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். கணவரிடம் கோபப்படாமல் அன்புடன் பழகுவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சுபிட்சம் கூடும். இனிமையான பேச்சால் மற்றவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.      

 

                                                                                               
 கன்னி 


திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான போக்கு தென்படும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும், பக்குவமாகச் சமாளிக்கவும். வாரக் கடைசியில் கணவரால் நலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் உதவுவார்கள். 

                                                                                       
 துலாம்


புதிய சொத்துகளும் பொருட்களும் வார முற்பகுதியில் சேரும். பயணத்தால் ஓர் எண்ணம் நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். மகன் அல்லது மகளால் மன வருத்தம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.  கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பேராசை கூடாது. 

                                                                          
 விருச்சிகம் 


வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் நேரம் இது. குறுக்கீடுகளும் தடைகளும் விலகும். மனத்துணிச்சல் கூடும். சொத்துகள் சேரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, விழாக்களில் பங்கு கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெற்றோரால் சில இடர்பாடுகள் ஏற்படும். அரசுப்பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. 

                                                                                      
 தனுசு


பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. மனதில் தெளிவு பிறக்கும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். அரசுப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கலைஞானம் உண்டாகும். 8-ம் தேதி முதல் கணவரால் சங்கடம் ஏற்படும். வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும்.

                                                                                              
 மகரம் 


வார முற்பகுதியில் பிறரால் புகழப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஓர் எண்ணம் ஈடேறும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. முன்பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரக் கடைசியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். 
 

                                                                                                        

 கும்பம் 


எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படலாம். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியமாகும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் மாதர்களுக்கு இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வாரப் பிற்பகுதியில் பண வரவு அதிகமாகும். முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். குடும்பத்தாரால் ஓரளவு நலம் பெறுவீர்கள். பெற்றோரால் நலம் உண்டாகும். பெரியவர்களிடம் பணிவு தேவை. 

                                                                                     
மீனம்


முக்கியமான எண்ணங்கள் வார முற்பகுதியில் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். தந்தை நலம் பாதிக்கும்; கவனம் தேவை. வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். அலுவலகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். 


 தொகுப்பு:  சு.சூர்யா கோமதி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ