Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளின் உண்டியல் சேமிப்பு... ஞாபகம் இருக்கிறதா பெற்றோர்களே..! #PiggyBank #500 #1000

 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசாங்கம் அறிவித்ததிலிருந்து அஞ்சறைப் பெட்டியில் ஆரம்பித்து லாக்கர்களில் வைத்திருக்கும் பணம் வரைக்கும் அதை எப்படி செல்லுபடி ஆக்குவது என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகள் ஆசை ஆசையாய் உண்டியலில் சேமித்துக் கொண்டிருக்கும் பணத்தைப் பற்றி யோசிக்கிறோமா?

 

அட போங்க! குழந்தைகளின் உண்டியலில் 500 ரூபாய் நோட்டா? என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எட்டாம் வகுப்பு படிக்கும் பவித்ராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் தரும் 10, 20, 50 ரூபாய்களை செலவு பண்ணாமல் சேர்த்து வைத்திருந்து, 500 ரூபாய் நோட்டாக மாற்றி உண்டியலில் போட்டு வைப்பாராம். பவித்ரா போல உங்கள் குழந்தைக்கும் சேமிப்புப் பழக்கம் இருக்கலாம் இல்லையா?

 

அப்படி இருந்தால், வேறு வழியே இல்லை. உண்டியலை உடைக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவே உண்டியலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இப்படி சொந்த காரணங்களுக்கு அல்லாமல் திடீரென உண்டியலை உடைக்க நேர்ந்தால் குழந்தைகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள். குழந்தைகள் வருத்தப்படாத அளவுக்கு நாம் நடந்து கொள்ளவது அவசியம். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை அவசியம் கவனியுங்கள்.

 

* உண்டியலை உடைக்கும் முன் அதற்கான காரணங்களைத் தெளிவாக குழந்தைகளிடம் புரிய வையுங்கள்.

* ஒருவேளை இதைப் பற்றி புரியாத குழந்தைகள் என்றால் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை வாங்கித் தருவதாக சொல்லுங்கள்.

* உண்டியலில் இருக்கும் மொத்தப் பணத்தையும் எண்ணுவதுடன், குறிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் கையில் கொடுத்து அவர்களையே எண்ணச் சொல்லுங்கள்.

* குழந்தைகள் கையில் இருக்கும் பணத்துக்கு நிகரான மாற்றுப் பணத்தை தயார் செய்யும் வரையில் அவர்களைத் தினமும் எண்ணி சரிபார்த்துக் கொள்ளச் செய்வது நல்லது.

* ஒருவேளை குழந்தைகளிடம் இருக்கும் 100 மற்றும் 50 ரூபாய்கள், உங்கள் அவசரத்துக்கு தேவைப்படுகின்றன என்றால் அதைப்பற்றி குழந்தைகளுக்குப் புரிய வைத்து அதன் பிறகு செலவு செய்யுங்கள்.

* உடைக்கப்பட்ட உண்டியலின் வரலாறு இதோடு முடிந்துவிட்டதாக கருதி குழந்தைகள் மனச்சோர்வு அடைய நேரிடும். ஆதலால் முடிந்தவரை அதற்கு மாற்றான புது உண்டியலை வாங்கி வைத்துக் கொண்டு இப்போதிருக்கும் உண்டியலை உடைப்பது நல்லது.

* கையில் காசு கிடைத்த உற்சாகத்தில் பணத்தைச் செலவு செய்துவிட்டு மீண்டும் அதைச் சேமிப்பாக்க மறந்துவிடுவோம். அது குழந்தைகளின் ஏக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மீண்டும் உண்டியலில் பணத்தைப் போடும்போது கூடுதலாக பணத்தைக் கொடுங்கள்.

* எந்தக் காரணம் கொண்டும் பணத்தட்டுப்பாடு, அவசரம் இதையெல்லாம் மனதில் வைத்து குழந்தைகளுக்கு தெரியாமல் உண்டியலை உடைத்து அவர்களை அழ வைக்க வேண்டாம்.

- பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ