Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலப்புத்திருமணம் செய்வோருக்கு அரசு நிதியுதவி-A-z தகவல்கள்


கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு வழங்கப்படும் 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண  நிதியுதவி'யைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதி, தேவைப்படும் சான்றிதழ்கள்,  விண்ணப்பிக்கம் முறை உள்ளிட்டவற்றை, கீழே உள்ள ஒன்று முதல் 7 வரையிலான வரிசை எண்களை அழுத்தித் தெரிந்துகொண்டு பயன்பெறவும்..! 

விண்ணப்பம்

உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கிடைக்கும் 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத்திருமண நிதியுதவித் திட்டம்' என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து, நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

நிதி விவரம்

பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்திருப்போர் கலப்புத்திருமணம் செய்துகொள்கிறார்கள் எனில், ரூபாய் 30,000-க்கான காசோலையும், ரூபாய் 20,000-க்கு தேசிய சேமிப்புப் பத்திரமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவர்கள், முடிக்காதவர்கள் கலப்புத்திருமணம் செய்துகொள்ளும்போது, அவர்களுக்கு ரூபாய் 15,000-க்கான காசோலையும், ரூபாய் 10,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியில் ஒருவர் ஆதிதிராவிடராகவோ அல்லது பழங்குடியினராகவோ இருக்க வேண்டும். அல்லது, ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும், மற்றோருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்

கலப்புத் திருமணம் நடந்து முடிந்த இரண்டு வருட காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி

படித்த மணமக்களுக்கு வழங்கப்படும் நிதியைப் பெற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்போ, பட்டயப்படிப்போ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இணைக்க வேண்டியவை

* திருமணப் பத்திரிகை * மணமகள் - மணமகன் சாதிச்சான்று * மணமகள் வயதுச்சான்று * கல்விச்சான்று(உரியவர்கள் மட்டும்)

குறிப்பு

நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நலத்துறையையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகலாம்.

 

 

 

 

சு.சூர்யா கோமதி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close