Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர் - குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவோம்!

 

 

பெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான். குழந்தைகளிடம் பாசம், கண்டிப்பு, திணிப்பு, அக்கறை அனைத்திலும் பெற்றோர்கள் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.

மரம், செடி, கொடி என ஒவ்வொரு செயல்களிலும் மாற்றங்கள் வந்துகொண்டே இருந்தாலும், மனிதர்களிடையே மட்டும் எத்தனை எத்தனை மாற்றங்கள். மாற்றங்கள் உருவாகுவது நல்லதுதான். ஆனால் அவை நன்மை தருபவையாக இல்லாமல் பிரச்னை தருபவையாக இல்லாமல் இருந்தால் அவற்றை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பெற்றோர்-பிள்ளை உறவில் விழுகிறது முதல் விரிசல். 

ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த வீடியோ சொல்கிறது.

பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல் வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம். 

இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம். இந்த வீடியோவைப் பாருங்கள்....உங்கள் குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்ளுங்கள்.

- கு.ஆனந்தராஜ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close