Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்பு உணர்வு மாரத்தான் ஓட்டம்!

பெண்களை அதிகம் அச்சம் கொள்ள வைக்கும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறது சென்னை, கிண்டி, அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட். இதற்காக ‘Mammo Run' எனும் பெயரில் 21.1 கிலோமீட்டர் தூரம் பெண்கள் ஓடுவதற்கான ஹாஃப் மாரத்தானை நாளை சனிக்கிழமை நடத்தவிருக்கிறது. இது முற்றிலும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வுக்காக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பாதிக்கப்படும் புற்றுநோய்களில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்த முடியும். 

இதனை எளிமையாக வீட்டிலேயே கண்டறிய முடியும். 2012- ம் ஆண்டு, அமெரிக்காவில் அரிமா சங்கம் மூலமாக நடந்த ‘Mammo Run' மாரத்தானில், கிராமம் மற்றும் நகரத்தைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம் இதற்காக 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த பணம் திருச்சியை சேர்ந்த மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  வழங்கப்பட உள்ளது. 

எந்த ஒரு போட்டியும் இல்லாமல், வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை மாரத்தான் ஓட்டம் இருக்கும்.   " இந்த மாரத்தான் ஓட்டத்தின் முடிவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த 12 பெண்கள் தங்களுடைய அனுபவங்களையும், முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பிற பெண்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த மாரத்தானில் கலந்து கொள்ளலாம்"  என்று அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. 


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ