Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்களை கவனிக்காமல் விட்டுவிட்டீர்களா..?

காலை எழுவது முதல் மாலை உறங்குவது வரை நாம் முதலில் பார்ப்பது செல்போனைத்தான். இன்றைய இளைஞர்களின் கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியப் பொருளாக செல்போன் இருந்து வருகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி. மேலும், பசுமையான பச்சை நிறங்களை பார்த்து வருவதும் குறைந்து வருகிறது. மேலும், பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கண்களை கவர்ச்சியாக காண்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் தரமற்ற மஸ்காரா, ஐ லைனர்கள் மற்றும் ஐ லேஷ்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். அப்படி தரமான மேக்கப் பொருட்களை போட்டிருந்தால், இரவு உறக்கப் போவதற்கு முன்பு கண்களில் போட்ட மேக்கப்பை கவனமாக முற்றிலும் அகற்றவேண்டும். கண்களில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப்படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி கண்கள் சிவந்து கண்ணீர் வர வாய்ப்பிருக்கிறது. 

மேலும், அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும். மேலும், வீட்டில் டி.வி பார்க்கும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து பார்ப்பது நல்லது. தினமும் எட்டு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவை. கண்களில் தூசு விழுந்துவிட்டால் கைகளைக் கொண்டு தேய்ப்பதை முதலில் நிறுத்துங்கள். இரண்டு கைகளிலும் தண்ணீரை எடுத்து அதில் கண்களை நன்கு திறந்து திறந்து மூடவும். தூசு ஏதும் இருந்தால் வெளியேறிவிடும். தினமும் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்வதை தவிர்க்க முடியாதவர்கள் கண்களை மூடி அதன் மீது தண்ணீரை தடவுங்கள். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலமாக கண்களில் உள்ள சோர்வு நீங்கும். கண் எரிச்சல் குறையும். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ