Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமா?

''வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களால் கர்ப்பமாவதோ, குழந்தைகளைப் பெறுவதோ கடினம் என பலர் கூறி வருகின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறாகும். உலக அளவில் உள்ள 10% க்கும் மேற்பட்ட வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு எல்லோரையும் போல தங்களது வாழ்க்கையை வாழ முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கியமான குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், முன் கூட்டியே திட்டமிட்டு தங்களது கர்ப்ப காலத்தை மேற்கொண்டால் 90% க்கும் மேல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகப்பிரசவத்தை மேற்கொள்ள கர்ப்ப காலத்தை முன் கூட்டியே திட்டமிடுவது சிறந்தது. இந்த நேரத்தில் வலிப்பு நோய்க்கான மருத்துவத்தையும் சரியானபடி எடுத்துக்கொள்ள முடியும்'' எனவும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

வருடத்துக்கு 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. கர்ப்ப காலத்தில் சரியான மருத்துவ முறையை மேற்கொண்டாலே 90%க்கும் மேல் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ