Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள்!

இயந்திர வாழ்க்கைக்கு பழகிக் கொண்டிருக்கும் பல பெண்களுக்கு நடப்பதற்கான வாய்ப்புகளே கிடைக்காமல் போகிறது. அமர்ந்த நிலையில் வேலைகளை தொடர்ந்து செய்வதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் சிறிது தூரம் கூட நடப்பதில்லை. குறிப்பாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமை, உடல் பருமன் அதிகரிப்பது, தொப்பை விழுதல் போன்ற பல பிரச்னைகளுக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர். இதற்கான ஆராய்ச்சியை நியூயார்க் ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 

நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் என ஆய்வின் மூலமாக இவர்கள் கண்டறிந்துள்ளனர். தினமும் சிறிது தூரம் வரையாவது நடப்பதன் வாயிலாக இதயத்துடிப்பு சீராகிறது. மேலும், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் சரியாகவும் இருக்கும். நடைப்பயிற்சியில் கலந்து கொண்ட 70 குழுக்களைச் சேர்ந்த பெண்களை 10 வாரங்களுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் அவர்களுடைய உடல் எடை, உடல் பருமன், இரத்த அழுத்தம், உடலின் செயல்பாடுகள் போன்றவை சீராக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்களாவது நடைப் பயிற்சி மேற்கொள்வதால் பெண்களுக்கு பல உடல் பிரச்னைகள் சரியாவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close