Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெர்மனி, ஹம்பர்க் நகருக்கு பெருமை சேர்த்த பாலியல் தொழிலாளி!


பெண்களுக்கு எந்தவிதமான உரிமையும் வழங்கப்படாத ஒரு காலக்கட்டத்தில் ஒரு அடிமைப் போல் விலை மகளாக வாழ்ந்தவர் டொமினிக் அனிதா நிஹாஃப். ஜெர்மனி, கூலீன் நகரில் பிறந்தவர் அனிதா. அப்போது இவரது தாயார் சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு, அடிக்கடி சிறைக்கு சென்று விடுவார். இதனால், அனிதாவும் அவரது சகோதரரும் அங்குள்ள ஒரு கத்தோலிக்க ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தனர். பதினாக்கு வயது வரை அந்த இல்லமே அனிதாவிற்கு ஆதரவளித்தது. இப்படி அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், அவரது பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் ஒரு பாலியல் புரோக்கர் இருந்தவர். 1972ம் ஆண்டு, அனிதாவின் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்து நின்ற அனிதா வேறு தொழிலுக்கு செல்ல முயற்சித்தும் முடியாமல் போக, இறுதியில் பாலியல் தொழிலுக்கே தள்ளப்பட்டார். ஹம்பர்க் மற்றும் கூலீன் நகரில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதிகளில் வாடிக்கையாளர்களை எதிர்கொள்வார் அனிதா.

இப்படி 1990ம் ஆண்டு வரை பாலியல் தொழிலில் ஈடுபட்ட, அனிதாவிற்கு அந்த தொழில் மூலமாக துயரப்படும் பெண்களை பார்த்த போது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களும் இவரைப் போலவே அடிமையாக வாழ வேண்டியிருந்தது.  இதனால், பாலியல் தொழிலை சட்டப்படி செய்ய அனுமதி கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். பெண்களை பெண்களாக பார்க்க வேண்டுமேத் தவிர, அவர்கள் ஈடுபடும் தொழிலை வைத்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தி போராட்டம் நடத்தினார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் தனியே வழங்கி வந்தார். அதுபோல் போதை மருந்து உட்கொள்ளும் ஏராளமான விலை மாதுக்களையும் அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்தார். தொலைக்காட்சிகளிலும் தோன்றி பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை முன் வைத்து விவாதம் செய்வார். இதன் மூலமாக மக்களிடையே பிரபலமான இவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. இரு சினிமாக்களில் நடித்துள்ளார் அனிதா. 

இப்படியெல்லாம் உரிமைக்காகப் போராடி வந்த, அனிதா கடந்த 2009ம் ஆண்டு நுரையீரல் நோய் காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது உடல் 'கார்டன் ஆஃப் வுமன்' என்று சொல்லப்படும் ஓல்ஸ்ட்ராஃப் மயானத்தில் புதைக்கப்பட்ட்து. ஹம்பர்க் நகரில் உள்ள இந்த மயானம் தான் உலகத்திலேயே பெரியது. ஆயிரம் ஹெக்டர்ல பரப்பளவில் 12 சிறிய சேப்பல்கள், என 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மயானம் பரந்து விரிந்து கிடக்கிறது. இத்தகைய மயானத்தில் புதைக்கப்பபட்ட ஒரே விலை மகள் என்ற பெருமையும் டொமினிக்கிற்கு கிடைத்தது. 

இந்த நிலையில் அனிதாவுக்கு மற்றொரு புகழாரத்தை ஹம்பர்க் நகரம் சூட்டியுள்ளது. அங்குள்ள தெரு ஒன்றிற்கு டொமினிக் அனிதா நிஹாஃப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஜெர்மனியின் யூத இனத்தை சேர்ந்த தொழிலதிபர் கிளெக்கல் வான் ஹல்மன். மற்றொருவர் மிகச்சிறந்த நடிகையான ஹெல்கா ஃபெடர்சன் ஆகியோரின் பெயர்களையும் தெருக்களுக்கு சூட்டியுள்ளது ஹம்பர்க் நகரம்.

-வே. கிருஷ்ணவேணி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ