Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19 வயதுக்குள், 41% பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் - ஆய்வறிக்கை!


இந்தியாவைப் பொறுத்தவரை பத்தில் நான்கு பெண்கள் தங்களின் 19 வயதுக்குள் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்கிற ஆய்வினை வெளியிட்டுள்ளது ACTIONAID RESEARCH.

அதாவது 19 வயதுக்குள் 41% பெண்கள் இந்தியாவில்  மனம் மற்றும் உடல் சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்கிற ஆய்வறிக்கை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், பிரேசிலில் 16% பெண்களும், லண்டனில் 12% பெண்களும், தாய்லாந்தில் 8% பெண்களும் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளது.

இதில் அதிகப்படியாக பெண்கள் பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் பிரேசிலில் தான். பிரேசிலில் 87% பெண்களும், இந்தியாவில் 73% பெண்கள் வன்முறையினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கான வாக்கெடுப்பானது வாக்குப் பெட்டிகள் மற்றும் இணையதளம் வாயிலாகவும் எடுக்கப்பட்டன. 


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று. இதனையொட்டி இந்த வாக்கெடுப்புகள் எடுக்கப்பட்டன. 82% பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் 25 முதல் 34 வயதினரே தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, தாங்கள் செல்லும் பாதையை மாற்றி வேறு பாதையில் செல்லுதல், தற்காத்துக் கொள்வதற்கான சின்னச் சின்ன ஆயுதங்களை தங்களுடைய கைப் பையில் வைத்திருத்தல், செல்ஃபோனில் எச்சரிக்கை அலாரத்தை செட் செய்து வைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ள ACTIONAID RESEARCH ன் தலைவர் சந்தீப் சந்திரா, 'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்படும்பொழுது அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போது பெண்களுக்கான இடங்களும், உரிமைகளும் அதிகரித்தே வருகிறது. இதை அனைவரும் அறிந்து கொண்டு பெண்களுக்கான சம உரிமையை வழங்குவது நம்முடைய கடமை' என கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ