Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் இவ்வளவுதானா?

பெண்கள்

 

மது நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதியாக இருக்கும் பெண்கள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில்லை. பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை பெற்றோர்கள் உணர ஆரம்பித்து சில வருடங்களே ஆகியுள்ளன. ஆனாலும் கல்வி கற்றவர்கள் அனைவரும் அதற்கு உரிய வேலைக்குச் செல்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிப்படிப்பையும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கல்லூரிப் படிப்பையும் முடிக்கின்றனர். ஆனால் திருமணத்துக்கு பிறகு 17 சதவிகிதப் பெண்கள் மட்டுமே(2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. 20 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இன்றைக்கு ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி கற்கின்றனர். ஆனால் கல்வி கற்கும் பெண்களில் கால்வாசியினர் கூட வேலைக்குச் செல்வதில்லை. இதற்கான பின்னணி காரணங்களை விளக்குகிறார் சமூக ஆர்வலரான ஜான் லோப்பஸ்.

அரசியல் என்பது ஆண்களுக்கானது; வேலைக்குச் செல்வது புருஷ லட்சணம்; குடும்பத்தை கவனிப்பது பெண்ணுக்கானது; இப்படிச் சொல்லியே பெண்களுக்கு வெளியுலக அனுபவம் சரியாக கிடைக்காமல் செய்துவிட்ட நிலையில், தற்போதைய 21-ம் நூற்றாண்டில்தான் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டிலுள்ள ஆண், பெண் பாகுபாடு, வளர்ச்சி, நிலை ஆகியவற்றை சரிசமமாக வைத்துதான் பார்க்கப்படும். இதில் ஆண்களின் வளர்ச்சிதான் எப்போதும் அதிகமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக, பெண்களை வெளியுலகத்தில் போற்றி பேசுவதும், வீட்டுக்குள் அடிமைப்படுத்தி வைப்பதும் இன்னும் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கின்றது. 

பெண்களுக்கும் ஆசை, உள் உணர்வுகள் இருக்கும். அதன்படி அவர்கள் விருப்பப்படும் வகையில் அவர்களைச் செயல்பட வைக்கிறோமா என்பது குடும்பத்தலைவர்கள், குடும்ப நபர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய முதன்மையான கேள்வி. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ச்சி பெற, பெண்கள் படித்திருந்தால் மட்டும் போதாது. கட்டாயம் வேலைக்கும் செல்ல வேண்டும். யாரையும் நம்பி இருக்காமல், தங்களின் சுயதேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலை உருவாக வேண்டும். அதனால் பெண்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பினைப் பெற முடியும். கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இன்றைக்கு நிறைய பெண்கள் வெளியூர், வெளிமாநில, வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். ஆனால், அவை படிப்பறிவு பெற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். அப்போது படித்த படிப்பு பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கப்படுகிறது. திருமணம் செய்த பிறகு பெரும்பாலும் கணவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயமாகத்தான் இன்னும் பெண்களின் நிலை இருக்கிறது. இதில் ஒருவர் உயர்ந்தும், இன்னொருவர் தாழ்ந்தும் செல்ல வேண்டியுள்ளது. இந்த முரண்பாடுதான் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். 

பெண்கள்

 

ஆண், பெண் இருவருமே இணைந்து ஒரு முடிவை எடுப்பதுடன், வீட்டுவேலை, குழந்தைகள் பராமரிப்பில் இருந்து அலுவலக வேலை வரை இருவரின் பங்களிப்பும் சரிவிகித அளவில் இருக்க வேண்டும். அவைதான் ஏற்ற தாழ்வற்ற சமூகமாக இருக்கும். இதனை நம் வீட்டில் இருந்து உருவாக்குவதன் மூலமும், சமூகமும் இந்த நிலைக்கு கட்டாயம் மாறும். ஆனால் இப்போதைக்கு நடக்கும் நிலையோ வேறு. திருமணம் முடிந்த பிறகு வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கும் சூழ்நிலையிலும், மற்றொருபுறம் பெரும்பாலான பெண்ணுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அவர்களின் கணவர்கள் மற்றும் கணவர் குடும்பத்தார் அப்பெண் வேலைக்குச் செல்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. 

பெண்கள் வேலைக்குச் செல்லக் காரணங்கள்:
* படித்த படிப்பை வீணாக்கமால் இருக்க.
* தனக்கென்று ஓர் அடையாளம் பெற்று சொந்த காலில் நிற்க.
* குடும்ப செலவீனம், எதிர்கால தேவைகளுக்காக.
* வெளியுலக அனுபவம் பெற.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கக் காரணங்கள்:
* கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.
* குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டுவேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டியதிருக்கும். இதனால் உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த சோர்வாகவே இருக்க நேரிடும். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் தொடர்ந்து வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கும் எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
* குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக்கொள்வதை முன்னிட்டு.
* பணியிடச்சூழல் பிரச்னைகளால்.
* வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை (வசதியானவர்களாக இருந்தால்)

இதில் வேலைக்குச் செல்லும் பெண்களில் பலரும், குறுகிய வட்டத்துக்குள்ளே தங்களது செயல்பாடுகளைத் தீர்மானித்துக்கொள்கின்றனர். குறிப்பாக காலையில் வேலைக்கு கிளம்பிய கணவர், ஆஃபிஸில் கூடுதல் வேலை, நண்பர்களை சந்திக்கச் செல்லுதல், பார்ட்டி போன்ற விஷயங்களால் வழக்கம் போல இரவு வீட்டுக்கு வரும் நேரத்தைவிடவும் பல மணிநேரம் கழித்தோ அல்லது சில இரவுகள் வீட்டுக்கே வராமலும்கூட இருக்கலாம். அதனை மனைவிகள் 'ஓ...சரிங்க' என எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் பெரும்பாலான மனைவிகளும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவனுக்காக கூறப்பட்ட அதே காரணங்களை வேலைக்குச் செல்லும் மனைவி சொன்னால், எத்தனைக் கணவர்கள், கணவர் குடும்பத்தார் இன்முகத்துடன் அக்காரணங்களை ஏற்றுக்கொள்வார்கள்?.

அப்படியே சில கணவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என வைத்தாலும்கூட, சில முறைக்கு மேல் அதே காரணத்தைக் கூறும்போது மனைவியிடம் சண்டைப் போடத்தான் செய்வார்கள். இது ஓர் உதாரணம்தான். இதுப்போல வேலைக்குச் செல்லும் பெண்களும் தினமும் வீட்டில் இருந்து கிளம்புவதில் இருந்து, மீண்டும் வீட்டுக்கு வருவது வரை பல கோணங்களிலும் பிரச்னைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதில் மிகவும் வருத்தத்துக்கு உரியது, தங்கள் ஆண் உயர் அதிகாரிகளால் கொடுக்கப்படும் பாலியல் ரீதியான பேச்சுக்களும், சீண்டல்களும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட பல பெண்கள், பிரச்னையிலிருந்து மீள ஆலோசனைக் கேட்டு வந்திருக்கின்றனர். இதில் தினமும் வீட்டுவேலைகளை செய்துவிட்டு அலுவலகம் சென்று திரும்பி, மீண்டும் வீட்டு வேலைகளை செய்வது என்பது மிகவும் கடினமான செயல். அப்படி இருக்கும்போது, கணவனாலும், அலுவலக உயர் அதிகாரிகளாலும் பல வடிவ பிரச்னைகளைச் சந்திப்பது மிகவும் விரக்தியையே ஏற்படுத்தும்.

 

                                                                                                              

* இன்றைய நவீன கால ஓட்டத்துக்கு ஆண், பெண் இருவருமே வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும். குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு சேமிக்க முடியும் என்கிறது குறிப்பிட்ட கணவர்கள் தரப்பு. 

* வசதி இருக்கிறது, தான் மட்டும் வேலைக்குப் போனால்போதும். மனைவி வீட்டில் இருப்பதே சரி எனச் சொல்கிறது மற்றொரு கணவர்கள் தரப்பு. 

இதில் முதல் தரப்பு கணவர்கள் பெரும்பாலும் தன் மனைவியின் ஏ.டி.எம் கார்டினைப் பயன்படுத்துவது, மனைவி சம்பாதித்தாலும் தன் தேவைக்கு கணவரிடம் பணம் பெறும் நிலைதான் அதிகம் இருக்கிறது. இரண்டாவது தரப்பில், முழுக்கவே கணவனை நம்பித்தான் செலவீனங்களைக் கட்டமைக்க வேண்டும். இவை இரண்டுமே பல எதிர்மறையான விளைவுகளை அடிக்கடி ஏற்படுத்துகின்றன. 

பெண்கள் படிப்பதுடன் மட்டுமில்லாமல், வேலைக்குச் செல்வதால் தன் சுயமரியாதையை அதிகம் பெற முடியும்; பல வெளியுலக அனுபவங்களை பெற முடியும்; எந்த ஒரு சூழலிலும் யாரையும் நம்பி இல்லாமல், சுயமாக முடிவெடுக்க முடியும்; பொருளாதார வளர்ச்சியும் பெருகும். ஆண்களுக்கு இணையாக எல்லா நிலைகளிலும் உயர முடியும். இதற்கு ஒவ்வொரு பெண்களின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்தான் முதலில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூறி முடிக்கிறார், ஜான் லோப்பஸ்.

- கு.ஆனந்தராஜ்
படம்: டி.அசோக்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close