Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவிடாய் சமயத்தில் ‘மென்சுரல் கப்’ பயன்படுத்தலாமா? #menstrualcup

மாதவிடாய்

 

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு மாற்றாக வந்துள்ளது மென்சுரல் கப்.  ஒரு மாதத்துக்கு நாப்கின் செலவு குறைந்தது 50 ரூபாயாவது ஆகலாம். அப்படியென்றால்  ஒரு வருடத்துக்கு  600 ரூபாய். 10 வருடங்களுக்கு  6000 ரூபாய்.  குறைவான அளவே இவ்வளவு என்றால், அதிகபட்சமாக  மாதத்துக்கு 500 ரூபாய். 10 வருடங்களுக்கு 60,000 ரூபாய். ஆனால் மாதவிடாய் சமயங்களில் நாப்கினுக்கு மாற்றாக  மென்சுரல் கப் நல்ல தரத்தோடு 2000 ரூபாய்க்குள்ளாகவே  விற்பனைக்கு கிடைக்கிறது.சுமார் 10 வருடங்களுக்கு ஒரே கப்பை பயன்படுத்தவும் முடியும். இதை, பெண்கள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி நம்மிடம் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர், மனுலட்சுமி!.

'மென்சுரல் கப்’ என்பது...

* சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட  மென்சுரல் கப்பை  பயன்படுத்தும் போது, மாதவிடாய் நேரத்தில் வெளியே வரக்கூடிய குருதியானது,  இந்த மென்சுரல் கப்பில் சேர்ந்து விடும்.

* மென்சுரல் கப்பில் சேரக் கூடிய குருதியை  4 முதல் 12 மணி நேரத்திற்குள் வெளியே எடுத்து கொட்டி விட்டு மீண்டும் அதை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாப்கினுக்கும் மென்சுரல் கப்புக்கும் என்ன வித்தியாசம்!

 * ஒரே ஒரு மென்சுரல்  கப்பை அதிகப்பட்சம் 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம்.

* நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளதுபோல் இந்த கப் பயன்படுத்துவதால் நிச்சயம் சுகாதாரக் கேடு ஆகாது.

 * பொதுவாக  வெஸ்ட்டர்ன் டாய்லெட்டுகளில்  நாப்பின்களைப் பயன்படுத்த சில சிரமங்கள் இருக்கும். ஆனால் இந்த மென்சுரல் கப்பை எந்தவிதமான டாய்லெட்டிலும் சுலபமாகப் பயன்படுத்தலாம்.

* மழையில் நனையும்போது நாப்கின் நனைந்துவிடுமோ என்ற டென்ஷன் இருக்கும். ஆனால் இந்த கப்பை பயன்படுத்துவதால் பீரியட்ஸ் நேரத்திலும் தாராளமாக மழையில் நனையலாம்.

 

 

பயன்படுத்துவதும் ரொம்ப சுலபம் தான்!

 * பெண்ணுறுப்பின்  வழியே இந்த மென்சுரல் கப்பின் மேற்பரப்பை, கைகளால் சுருக்கி உட்புறமாக செருகவும்.

* பெண்ணுறுப்பின் வழியே நுழைந்ததும் அது, தானாக விரிந்து ஒரு கப் போல கருப்பைக் குழாய்க்கு வெளிப்புறத்தில் அதை சூழ்ந்துக் கொள்ளும்.

* அதன்பிறகு, கப்பில் கொஞ்சம் கொஞ்சமாக  குருதி சேரும். அதிகபட்சம் 12 மணிநேரத்துக்குப் பிறகு இதை ரிமூவ் செய்வது அவசியம். மாதவிடாய் நிகழும் நாட்கள் முழுக்க இதே போல செய்யலாம்.

*  பெண்ணுறுப்பின் வழியே விரலை விட்டு கப்பின் ஒரு பக்கமாக லேசா அழுத்தி வெளியே எடுத்தால் மென்சுரல் கப் வெளியே வந்துவிடும். அதனால் இதைப் பயன்படுத்துவதில் பயம் தேவை இல்லை.

* மாதவிடாய் முடிந்தப் பிறகு இந்த கப்பை சுத்தம் செய்து சுகாதாரமான இடத்தில் வைப்பது நல்லது. தரத்துக்கு ஏற்ற முறையில் வெந்நீரில் கொதிக்க வைத்து பத்திரப்படுத்தியும் வைக்கலாம்.

 

 

பக்க விளைவுகள் உண்டா?

* திருமணமாகாத பெண்களுக்கு மென்சுரல் கப்பைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கலாம். உடலுறவுக்கு உட்படாத பெண்கள் இதை பயன்படுத்துவதில் சற்று சிரமம் இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தவிர்க்கலாம்.

* பயண நேரத்தில் பயன்படுத்த சுலபம் என்றபோதிலும், செல்கிற அனைத்து இடங்களிலும் இந்த கப்பைச் சுத்தம் செய்கிற வசதி இருக்குமா என்று  சொல்ல முடியாது. அதனால், நீங்கள் செல்லும் தொலைதூரப் பயணங்களைப் பொறுத்து இதன் பயன்பாட்டை அமைத்துக்கொள்ளலாம்.

* சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது பொருந்தவே பொருந்தாது. அதனால் பயன்படுத்த நினைப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

* சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று ஏற்படலாம்

* எந்த ஒரு மருத்துவ கண்டுப்பிடிப்பும் தனிநபரின்  உடல்சார்ந்துதான். அதன் பயன்களும் பக்க விளைவுகளும் இருக்கக்கூடும். அதனால் இந்த மென்சுரல் கப் பெண்களின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படாத பட்சத்தில் கண்டிப்பாக இது பயனுள்ளதாக அமையும்.

- பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ