Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்றோராகவே இருந்தாலும் குழந்தைகளை அடிக்கலாமா? என்ன சொல்கிறது சட்டம்?

சட்டம்

குழந்தைகள் உரிமைகள் என்று பேச ஆரம்பித்தாலே அடுத்து எழும் கேள்வி ‘குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட உரிமை இருக்கிறதா ?’ என்பதுதான். சொல்லப்போனால் குழந்தைகளுக்கான உரிமைகள் கடைப்பிடிக்கப் படவேண்டியவை. காப்பாற்றக் கூடியவை. பெற்றோர்களே என்றாலும் குழந்தைகள் மீது அதிக அளவில் உரிமை எடுத்துக் கொண்டு அவர்களை துன்புறுத்துவது சரியானதல்ல. குழந்தைகள் உரிமைகள் குறித்துப் பேசுகிறார் தோழமை குழந்தைகள் உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த தேவநேயன்.

’குழந்தைகள் மீதான தாக்குதல்கள் வீட்டில், சமூகத்தில் என தொடர்ந்து இருவேறான சூழல்களிலுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்ய வைத்தல், உடன் பிறந்தவர்களை பராமரிக்க பணிக்கப்படுதல் போன்றன எல்லாம் நம் வீட்டில் நடக்கும் சொல்லப்படாத சுரண்டலே. வெளியிடங்களில் குழந்தைகளை வேலை செய்ய வைத்தால் அவை பொருளாதார சுரண்டலாகவும் பார்க்கப்படுகிறது. வீட்டில் செய்யும் வேலைகள் கடமை என்கிற அடிப்படையில் குழந்தைகளிடம் இருந்து பெறப்படுகிறது. அடிப்படையில் வீட்டில் ஒரு குழந்தை செய்யும் வேலையை வெளியிடத்தில் செய்யும் போது அதற்கான வருவாய் அந்த குழந்தைக்கு கிடைக்கலாம். ஆனால் அது வீட்டில் செய்வதால் மறுக்கப்படுகிறது’’ என்னும் தேவநேயன், ’’இந்த செயல்களால் பெருமளவு பாதிக்கப்படுது பெண் குழந்தைகளே’’ என்கிறார்.

what does children rights

’’ஒரு வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் என இருபாலர் இருந்தாலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளை அடித்தல், திட்டுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்டவைகள் சொந்த வீட்டிலேயே குழந்தைகளுக்கு எதிராக what does children rightsநடந்து கொண்டிருப்பதை கவனிக்க வேண்டி உள்ளது. அதற்கு நாம் குழந்தைகள் பற்றிய சட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
அதே போல் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என சட்டங்கள் சொன்னாலும், பாரம்பர்ய தொழிலை குழந்தைகள் செய்வதை சட்டம் தடுக்கவில்லை. அதாவது ஒரு குடும்பத்தில் அப்பளம் வியாபாரம் செய்கிறார்கள் என்றால், அக்குடும்பத்தில் உள்ள குழந்தையை அந்த வியாபாரத்தில் ஈடுபடுத்தும் போது அது குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால் குடும்ப தொழிலாக இருந்தாலும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை கவனத்துக்கு கொண்டு வந்தால் அதற்கான நடவடிக்கை  எடுக்க முடியும். அதே போல்  குழந்தைகள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களை வற்புறுத்தி வேலை வாங்குவதாக கவனத்துக்கு கொண்டு வந்தாலோ, அந்த குழந்தையை துன்புறுத்துவது குறித்து மூன்றாம் நபர் புகார் கொடுத்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு.

காட்சி ஊடகங்களிலும் குழந்தைகளை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற வரம்புகள் இருக்கின்றன. ஆக, குழந்தைகள் மீது எந்த வகையில் வன்முறை நடத்தப்பட்டாலும், 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணில் அழைத்து தகவல் தரலாம். துன்புறுத்தல் எந்த அளவில் இருக்கிறதோ அதற்கேற்ப பொதுச்சட்டம் சம்மந்தப்பட்டவர்கள் மீது பாய வாய்ப்புண்டு. எல்லாவற்ற்றிகும் மேலாக அவர்கள் குழந்தைகள். அவர்களை குழந்தைகளாக நடத்துவது முக்கியம். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான பந்தம் அவர்களை வேலை வாங்குவதில் மட்டுமல்ல’’ என்றார் நிறைவாக!

- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close