Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மார்க் குறைவாக எடுத்த குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? #GoodParenting

மார்க்


ரையாண்டுத் தேர்வு முடிகள் என்னவென்று இந்நேரம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும். அப்சர்வேஷன் கார்ட், மார்க் ஷீட் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் ஒரு கார்டு மூலம் பிள்ளைகள் இதுவரை படித்துத் தெரிந்துகொண்டவற்றுக்கான மதிப்பெண்களைப் பெற்றிருப்பார்கள். இனி முழு ஆண்டுத் தேர்வு, பொதுத் தேர்வு என்று முக்கியத் தேர்வுகள் வரிசை கட்டப்போகிற நேரம். உங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளலாம் என்கிற ஆலோசனைகளைத் தருகிறார், சேலம் ஹெலிக்ஸ் ஜி.செந்தில்குமார்.


* உங்கள் குழந்தை குறைவான மார்க் எடுத்திருந்தால், திட்டாதீர்கள். அதற்குப் பதில், எடுத்திருக்கும் மார்க்குக்காக முதலில் பாராட்டுங்கள்.

* அரையாண்டுத் தேர்வில் எதனால் மார்க் குறைந்தது என்பதை குழந்தைகளிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகள் வீட்டில் நன்றாகப் படித்து, தேர்வில் பிரசன்டேஷன் முறையில் தப்பு செய்திருக்கலாம். அந்த நேரத்தில் ஏற்பட்ட டென்ஷன் காரணமாக படித்தவற்றை மறந்து போயிருக்கலாம் என உங்களுக்குத் தெரியாத காரணங்கள் பல இருக்கலாம். முதலில் அவற்றைப் பற்றி குழந்தைகளுடன் பேசி தெரிந்துகொள்ளுங்கள்.

* மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டுப் பேசிவிடாதீர்கள்.

* ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள, குறைந்த மதிப்பெண் எடுத்த குழந்தைகளை, வருகின்ற தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.

* எந்த பாடம் குழந்தைக்கு கடினமாக இருக்கிறது? ஏன் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை எப்படி எளிதாகச் சொல்லிக்கொடுக்கலாம் என்பதைத்  தீர்மானித்து சொல்லிக்கொடுங்கள்.

* போன வருஷம் நல்லாதான படிச்ச, இப்ப என்ன கேடு என்பது போன்ற கோபமான வார்த்தைகளை எல்லாம் எக்காரணம் கொண்டும் சொல்லாதீர்கள். அதற்கு பதில், காரணத்தைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

 

மார்க்


* பொதுத் தேர்வில், நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை, உங்கள் குழந்தைகள் எடுக்காவிட்டால் ஆத்திரப்படாதீர்கள். அடுத்தது என்ன என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். அவர்களுடைய விருப்பத்தைக் கேட்டு, அந்தப் பிரிவில் அவர்களை பதினொன்னாவது சேர்த்துவிடுங்கள். இப்பொதெல்லாம் புதுப்புது கோர்ஸ்கள் அதிகம் வந்துவிட்டன.

* இதே நிலைதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிபெண்களுக்கும். தேர்வில் குறைவாக மார்க் எடுத்தவர்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது என்பது எல்லாம் கட்டுக்கதை என்பதை உங்கள் வாழ்கைப் பாடங்களில் இருந்து கற்றிருப்பீர்கள்.

* இன்று கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக கோடிக்கணக்கில் சம்பளத்தை அள்ளிக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சை, தன்னுடைய பள்ளிப் படிப்பின்போது ஆவரேஜ் ஸ்டூடண்ட் தான் என்பதைப் பல பேட்டிகளில் சொல்லியிருப்பார். அவர் முன்னேறியதற்குக் காரணம்  மதிப்பெண்கள் மட்டுமல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தன் மீதான நம்பிக்கை, ஊக்கம் கிடைத்தால், தனக்கு விருப்பமான துறையில் எல்லா குழந்தைகளாலும் சாதிக்க முடியும்.


-கே.ஆர்.ராஜமாணிக்கம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close