Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்றோர்கள்.. குழந்தைகள் முன் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்! #GoodParenting

பெற்றோர்

 


தற்கெடுத்தாலும் குழந்தைகள் மீது விஷயங்களை திணிக்காமல், அவர்களை இயல்பாக வளர்ப்பதே பெற்றோர்கள் தங்கள் கடமையாக நினைக்க வேண்டும். தன் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், அவர்களது குழந்தை முன் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள் குறித்து பேசுகிறார் வேலூரைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் ஹேமகுமார்.

முதல் ரோல் மாடல் பெற்றோரே!

குழந்தைகள் பெற்றோரையே கவனித்து வளர்கிறார்கள். அதனால் நம்முடைய நல்ல பழக்க வழக்கங்களையே அவர்கள் பின் தொடர்வதால், சுத்தமாக இருப்பது, சுறுசுறுப்பாக அதே நேரம் பொறுப்பாக செயல்படுவது என நம் செய்கைகள் மூலம் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருப்போம்.

தட்டிக் கொடுக்கலாமே!

குழந்தைகளை இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்லி அவர்களை திட்டவோ அடிக்கவோ செய்யாமல் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தினால் செய்யக் கூடாத விஷயங்களின் மீதிருந்த கவனம் குறைந்து,  நாம் தட்டிக் கொடுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.

குடும்பமாய் பிணைந்திருங்கள்!

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து டிவி பார்ப்பது, விளையாடுவது, சாப்பிடுவது இதெல்லாமே இப்போது அரிதாகிவிட்டது. ஆளுக்கொரு கைப்பேசி, அறைக்கு அறை தனியாக டிவி என தனிநபர் வாழ்க்கையே சாத்தியமாகிக் கொண்டிருப்பதால் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். ஒருவேளை உணவு நேரத்தையாவது குடும்பத்துடன் சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். வார நாட்களின் இறுதியில் கூட இதை சாத்தியப்படுத்த முயற்சிக்கலாம்.

இயல்பான வாழ்க்கைக்குப் பழகுங்கள்!

குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ, உங்களுடைய  சக்திக்கு மீறி செலவு செய்து அவர்கள் கேட்டதை வாங்கித் தர வேண்டாம். அவ்வாறு செய்வதால் திடீர் பண நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போவதுடன் சேமிப்பின் அவசியத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியாத ரோல் மாடல் ஆகிவிடுவீர்கள்.

டெக்னாலஜியில் மூழ்காதீர்!

எப்போதும் மொபைல் வழியாகவோ அல்லது கணினி வழியாகவோ நீங்கள் டெக்னாலஜியில் மூழ்கிக் கொண்டிருந்தால் உங்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பில்லாமல் உங்கள் குழந்தைகளும் வீடியோ கேம்ஸ், இணையம் என மனித தொடர்பை விட டெக்னாலஜியோடு தான் அதிக அளவில் தொடர்பு வைத்திருப்பார்கள். இதனால் நிஜ உலகத்தை விட அவர்களுக்கு நிழல் உலக போதையே அதிகரிக்கும்.

விளையாட்டு அவசியம்!

சதுரங்கம், பல்லாங்குழி, கேரம் போர்டு உள்ளிட்ட வீட்டில் விளையாடக் கூடிய மூளை வளர்ச்சிக்கு உதவும் விளையாட்டுகளையும் அதே நேரத்தில் டென்னிஸ், கிரிக்கெட், சடுகுடு முதலான உடலுக்குப் பயன் தரும் விளையாட்டுகளையும் குழந்தைகள் விளையாட அனுமதியுங்கள்.

வாசிப்பை பழக்கப்படுத்தலாம்!

குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் கதை சொல்வதே அரிதாகிவிட்ட நிலையில் தூங்கும் முன் கதை சொல்வதை வழக்கமாக வைத்திருங்கள். நல்ல கதைகளை கேட்பதன் மூலம் அந்த கதைக்குள்ளான உலகில் அவர்கள் பயணிப்பதுடன் கூடுதலாய் கதைகள் தேட  அவர்களின் வாசிப்புப் பழக்கமும் இயல்பாகவே அதிகரிக்கும்.


ஆரோக்கியம் அவசியம்!

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உணவை உண்ணப் பழகும் போதும் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். எனவே நல்ல உணவை உண்பதும் போதுமான உடற்பயிற்சியுமே நல்ல மனநிலையுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

- பொன்.விமலா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close